உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக உள்ளாடையை திருடிய தகவல்

உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக உள்ளாடையை திருடிய தகவல்

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, உயிரிழந்தார். அவரின் உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக அவரது உள்ளாடையை திருடிய தகவல் வெளியாகியுள்ளது. மத்தியக் கிழக்கு நாடான ஈராக்கை சேர்ந்த பாக்தாதி, 2014ல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துவக்கினார். பல்வேறு கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இந்த அமைப்பினர், ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தலைமறைவாக இருந்த பாக்தாதியை கண்டறிந்த அமெரிக்க படைகள், பதுங்கி இருந்த இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். அனைத்து தரப்பிலும் சுற்றி வளைக்கப்பட்டதால் தப்பிக்க முடியாது என்ற…

Read More

அமெரிக்க ராணுவ நாய்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம்

அமெரிக்க ராணுவ நாய்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம்

சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணமடைந்ததாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்தது. சுரங்கத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் சென்றபோது அவர்களுடன் ராணுவ நாயும் சென்றது. நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார். இதில் ஒரு நாய்க்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நாயின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாக்தாதி மீதான தாக்குதலில் இந்த நாய் முக்கிய…

Read More

அல்-பாக்தாதி மரணம் – அமெரிக்காவிற்கு இது ஒரு சிறந்த நாள்

அல்-பாக்தாதி மரணம் – அமெரிக்காவிற்கு இது ஒரு சிறந்த நாள்

ரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இட்லிப்பில், அல் பாக்தாதி…

Read More

பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது

பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது

முன்பு திட்டமிட்டபடி பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த தேதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12-ம் தேதியே, பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. இந்த மாத இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது. இந்நிலையில், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காததுடன், வெளியேறுவதற்கான தேதியை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பதை…

Read More

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. நீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய…

Read More

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகியை டுவிட்டரில், இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பாக்.,நாட்டு பாடகியான ரபி பிர்சதா (Rabi Pirzada) என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்து சரமாரியாக கருத்து பதிவிட துவங்கினர். இதில் ஒருவர், இது பாக்.,கின் தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாக்., முழு ஆதரவு அளிப்பது…

Read More

வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், நாளை தீபாவளி கொண்டாடுகிறார். தீபாவளி பண்டிகை, அக். 27ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, 2009 முதல், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவங்கினார்.இதையடுத்து, அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், 2017 – 18களில், தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நவ்ஜீத் சிங்கை, அதிபர் டிரம்ப் அழைத்தார்.இம்முறை மூன்று தினங்கள் முன்னதாக, நாளை நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில், யார் யார் பங்கேற்கவுள்ளனர் என்பது பற்றி, தகவல் வெளியிடப்படவில்லை. அன்றைய தினம்,…

Read More

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் ஆளும் கட்சியின் தலைவர் சஜித் பிரமதேசாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 35 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். 15 மில்லியன் வாக்களர்கள், வாக்களித்து தங்கள் நாட்டு அதிபரை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழுவினர் கடந்த 11 ஆம் தேதி அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் உறுப்பினரான போர்சுகலைச்சேர்ந்த மரிசா மதியாஸ் இக்கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேர்தலை 6–வது முறையாக ஐரோப்பிய யூனியன்…

Read More

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே ஐஎம்எஃப் கூறியிருந்தது. தற்போதுள்ள மந்தநிலை சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான். இந்தியாவில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஊரக வருவாய் வளர்ச்சி பலவீனமாக உள்ளதோடு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்புகள் உள்ளன. இந்த காரணிகள் முதலீடு, நுகர்வு ஆகிய இரு அம்சங்களிலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

Read More

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும். பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இதுதொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகிறது….

Read More
1 22 23 24 25 26 48