பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த தகவலை அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார். தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ‘சிகரம்’ தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் ‘பாலு’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன்,…

Read More

எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து – எம்.ஜி.எம் மருத்துவமனை

எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து – எம்.ஜி.எம் மருத்துவமனை

கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 75, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.’எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.பி., உடல் நிலையில் ஏற்பட்டு வந்த முன்னேற்றத்தால், திரவ உணவு வழங்கப்பட்டு வருவதாக, அவரது மகன் சரண், சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.எம்.ஜி.எம்., மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த, 24 மணி நேரத்தில், எஸ்.பி.பி., உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன், தொடர்ந்து சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அவரது…

Read More

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம்  !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில், பலரும் பங்கேற்றதே காரணம் என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லி நிஜாமுதீனில், கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்தனர். அதில் பலருக்கு, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர், விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட, 2,765 பேர் மீது, 11 மாநிலங்களில், 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜ்யசபாவில் தப்லிகி ஜமாத் குறித்த கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிஷன்…

Read More

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

நவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி!!

அயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 – 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., – எம்.பி.,யுமான…

Read More

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக…

Read More

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

“நான் கிருஷ்ணா” மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐ- கிருஷ்ணா (நான் கிருஷ்ணா ) மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி கண்டோரை மயங்க வைத்தீர். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமியில் அற்புதமாக நடந்த மாறுவேட போட்டியின் விற்றியாளர்களை இந்த வீடியோவில் காணுங்கள் … வாழ்த்துங்கள் … அனைவருடனும் பகிர்ந்து இளம் திறமையாளர்களை ஊக்குவியுங்கள். இந்த விடியோவை பாருங்கள்… பகிருங்கள் & மகிழுங்கள் தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்”…

Read More

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 75 கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ‘எக்மோ’ போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் அவருக்கு தேவைப்படுகிறது. செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை…

Read More

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணவன், சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட மறுத்ததால், அவரை மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது கை எலும்பு உடைந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசிக்கும் ஹர்சத் (40), தனது மனைவி தாராவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சண்டையின் போது தனது மனைவி தாக்கியதில் தனது கை எலும்பு உடைந்ததாக ஹர்சத், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியதாவது: கடந்து வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நான் மனைவியிடம் இரவு உணவு கேட்டேன். அவர் சப்பாத்தி, உருளைகிழங்கு மசாலா சாப்பிட கொண்டு வந்தார். எனக்கு நீரிழிவு (டயாபடிக்) நோய் உள்ளதால், உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்தேன்.   அதற்கு தகாத…

Read More

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

இலங்கை தாதா அங்கொட லொக்கா, 36. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் கோவையில் தங்கியிருந்தான். இவரது மர்ம மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏழு தனிப்படைகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருவத்தை மாற்ற அங்கொட லொக்கா திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அவர் அணுகியுள்ளார். அங்கு தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக தனது மூக்கை சற்று பெரிதாக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது பேச்சை உண்மை என, நம்பிய டாக்டர்கள் அவருக்கு மூக்கில் கடந்த, பிப்., மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் மாறுபட்ட முகத்துடன் அங்கொட லொக்கா உலா…

Read More

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன்…

Read More
1 14 15 16 17 18 35