போர் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதின் தகவல்

போர் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதின் தகவல்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இருவாரத்திற்கும் மேலாகியும் உக்ரைன் மீதான உக்கிர போரை ரஷியா நிறுத்தவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷியா, தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. உக்ரைன் படைகளும் கடும் சவால் அளிப்பதால், ரஷியாவில் எளிதில் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும் அதையெல்லாம் ரஷிய பொருட்படுத்த மறுத்து பதிலுக்கு பதில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், பதற்றம் நீடித்த படியே உள்ளது. இருப்பினும், ஒருபுறம் உக்ரைன் –…

Read More

உலகம் செய்தி ‘மெராபி’ எரிமலை வெடிப்பு பொதுமக்கள் வெளியேற்றம்

உலகம் செய்தி  ‘மெராபி’ எரிமலை வெடிப்பு பொதுமக்கள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவில், ‘மெராபி’ எரிமலை வெடித்து, தீக்குழம்பு வெளியேறி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் 250 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், இங்கு, மத்திய ஜாவா – யோக்கியகர்தா இடையே இருக்கும், 2,968 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலை, நேற்று முன்தினம் இரவு வெடித்துச் சிதறியது.அதிலிருந்து கரும்புகையுடன், தீக்குழம்பும் வெளியேற துவங்கியுள்ளது. அது, எரிமலையை சுற்றி வழிந்தோடுவதோடு, அதில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களில் பரவி வருகிறது.இதையடுத்து, சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 253 பேர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மெராபி எரிமலை 450 ஆண்டுகளுக்கும்…

Read More

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இன்று காலை ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும்….

Read More

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி அளிக்க தயார்; உலக வங்கி அறிவிப்பு

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி அளிக்க தயார்; உலக வங்கி அறிவிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என கூறியது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த கூடும் என்ற சூழலில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய தூதர்களை திரும்ப பெற்றுள்ளன. இதேபோன்று மாணவர்கள் உள்பட இந்தியர்களை நாடு…

Read More

தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,897 பேரும், கோவையில் 2,456 பேரும், செங்கல்பட்டில் 1,430 பேரும், திருப்பூரில் 1,425 பேரும், சேலத்தில் 1,101 பேரும், ஈரோட்டில் 1,070 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 45 ஆயிரத்து 220 பேருக்கு தொற்று உறுதி…

Read More

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி…!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி…!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், பாரத் பயோடெக் உருவாகியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்தப்பட உள்ளது….

Read More

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றார். இதனையடுத்து மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படும். இதன்படி இன்று மதியம் இந்த பூஜை நடைபெற்றது….

Read More

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

அடாவடிக்கு பெயர் போன நாடாக சீனா மாறி வருகிறது. ஒற்றை கட்சி ஆட்சி என்பதாலோ என்னவோ, உலகத்துக்கே தான் வைத்தது தான் சட்டம் என்ற நினைப்பு, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வந்து விட்டது போலும். பதிவு: ஜனவரி 05, 2022 08:38 AM ஒரு பக்கம் தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம், இந்தியாவுடன் சீனாவுக்கு நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிற சூழலில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கிறது. கல்வான் தாக்குதல் இதற்கிடையேதான் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படைகளுடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கில் சீன துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அதே ஆண்டின்…

Read More

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த மருத்துவர் எஸ். சந்திரா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 3வது அலையின் தொடக்கத்தில் நாடு உள்ளது என காட்டுகிறது. இந்த காலகட்டத்தில், ஒமைக்ரான் வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும். டெல்டா வகை கொரோனாவை விட இதன் அறிகுறிகளின் கடுமை மிக குறைவாகவே உள்ளது. அதனால் பாதிப்பு அதிகளவில் இருக்க…

Read More

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் அதிகரிப்பு மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்படி புதிதாக 2 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியானார்கள். இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென எகிறி உள்ளது. இங்கு நேற்று ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது….

Read More
1 27 28 29 30 31 77