காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் காரிடார்பற்றிய புது தகவல்கள் !! தற்சமயம் அமைந்துள்ள கோவில் வல்லஹத்தின் முக்கியத்துவம் !! காசி விஸ்வநாதர் – அன்னபூரணா தேவியின் மகிமை !! கிளிக் செய்து கோவிலின் முதல் தமிழ் டிரஸ்டி ஸ்ரீ வெங்கட்ராமன கனபாடிகளிடமிருந்து கேட்டு கண்டு … அனைவரோடும் பகிரவும்

Read More

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,00,342 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,013 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,691 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை…

Read More

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

அண்ணாத்த படம் திரைக்கு வந்த நிலையில் ரஜினிகாந்துக்கு லேசான உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார். ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பேசினார். இதனால் ரஜினியின் புதிய படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சில இயக்குனர்களையும் அழைத்து ரஜினி கதை கேட்டதாக தகவல் வெளியானது. தேசிங்கு பெரியசாமியுடன் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், படையப்பா, லிங்கா…

Read More

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறியப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Read More

ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக்…

Read More

ஒமைக்ரான் பரவல்: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை? – முதல்-அமைச்சர் ஆலோசனை

ஒமைக்ரான் பரவல்: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை? – முதல்-அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்தநிலையில் வருகிற 15-ந்தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது தற்போதுள்ள…

Read More

ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில்,  25 நாட்களுக்குப் பிறகு  ஆர்யன் கானுக்கு  மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வாரந்தோறும் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,  வாரந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, போதைப்பொருள் வழக்கு விசாரணை, டெல்லி…

Read More

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – விவசாய அமைப்பினர் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – விவசாய அமைப்பினர் அறிவிப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்கு பின் விவசாய அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- , அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வழக்குகளை வாபஸ் பெறும் முன் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாகும். இவ்வாறு அவர் கூறினார். வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதிய நிலையில் வேளாண் சங்கம் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Read More

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது. ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது. ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்….

Read More

கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சென்னை உள்பட இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி  ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
1 28 29 30 31 32 77