கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்
கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார். நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார். இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா, வசந்தகுமார்….
Read More









