சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணவன், சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட மறுத்ததால், அவரை மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது கை எலும்பு உடைந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசிக்கும் ஹர்சத் (40), தனது மனைவி தாராவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சண்டையின் போது தனது மனைவி தாக்கியதில் தனது கை எலும்பு உடைந்ததாக ஹர்சத், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியதாவது: கடந்து வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நான் மனைவியிடம் இரவு உணவு கேட்டேன். அவர் சப்பாத்தி, உருளைகிழங்கு மசாலா சாப்பிட கொண்டு வந்தார். எனக்கு நீரிழிவு (டயாபடிக்) நோய் உள்ளதால், உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்தேன்.   அதற்கு தகாத…

Read More

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ், 55, அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது. அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர் வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ் பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள்…

Read More

டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டில்லியில் உள்ள சீன நிறுவனங்களில், வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து டில்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். சோதனையில் 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்க ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று…

Read More

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.  கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய…

Read More

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது : திமுக-விற்கு பயங்கர அதிர்ச்சி !!

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது : திமுக-விற்கு பயங்கர அதிர்ச்சி !!

திமுக-விற்கு அதிர்ச்சி கொடுத்த மொடக்குறிச்சி ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சி.. ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது.. 5.8.2020 புதன்கிழமை அன்று மொடக்குறிச்சி ஒன்றியம் அரச்சலூர் அருகில் உள்ள வடுகபட்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டில் ஜேஜே நகரில் பாரதிய ஜனதா ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அவர்களின் ஏற்பாட்டில் திமுக கிளை செயலாளர் தேவராஜ் தலைமையில் திமுகவில் உறுப்பினராக இருந்த 70 குடும்பங்களை சார்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட்ட பலர் விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ் ஏ சிவசுப்பிரமணியன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. முன்னதாக முருகரின் வேல் பூஜை செய்து ஸ்ரீ…

Read More

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

இலங்கை தாதா அங்கொட லொக்கா, 36. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் கோவையில் தங்கியிருந்தான். இவரது மர்ம மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏழு தனிப்படைகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருவத்தை மாற்ற அங்கொட லொக்கா திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அவர் அணுகியுள்ளார். அங்கு தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக தனது மூக்கை சற்று பெரிதாக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது பேச்சை உண்மை என, நம்பிய டாக்டர்கள் அவருக்கு மூக்கில் கடந்த, பிப்., மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் மாறுபட்ட முகத்துடன் அங்கொட லொக்கா உலா…

Read More

அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் – யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் – யோகி ஆதித்யநாத்

ராமர் கோவிலுக்கு, அயோத்தியில் கடந்த 5ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் உ.பி., முதல்வர் யோகி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில் தன்னிபூர் என்ற இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பொறுப்பு, உ.பி., மாநில சன்னி மத்திய வக்போர்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உ.பி., முதல்வர் யோகி ஆத்யநாத் அயோத்தி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு பின் அளித்த பேட்டி விவாதத்தை கிளப்பி உள்ளது. பேட்டியில் அவர் கூறியதாவது: ஒரு முதல்வராக என்னிடம் கேட்டால் எந்த மதத்துடனும், சமூகத்துடனும் எனக்கு பிரச்னை…

Read More

டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்துக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியது; அவரது தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை முடக்கி டுவிட்டர், நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில், பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் கொரோனாவை கொண்டு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா…

Read More

ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் – மோடி வாழ்த்து

ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் – மோடி வாழ்த்து

இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக ராஜ பக்சே பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார். இலங்கை பார்லி.யில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் ஒட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப் பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் ஓட்டு போட்டார். பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. .ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன…

Read More

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன்…

Read More
1 123 124 125 126 127 256