இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரனின் கருத்து நேற்றைய தினம் (20) அமைந்திருந்தது. “இலங்கை நாடானது தமிழர் பூமி” எனவும், “இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்” எனவும், “தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி” எனவும் விக்னேஷ்வரன் நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார். இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று (21) தெரிவித்துள்ளார். தமிழர்களின் சுயவுரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தில்…
Read More









