கொரோனாவால் மிக மிக மோசமான பேரழிவு ஏற்படும் ?

கொரோனாவால் மிக மிக மோசமான பேரழிவு ஏற்படும் ?

சுகாதாரம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கா விட்டால் கொரோனா வைரஸ் மிக மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம்…

Read More

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

‘மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்து வருகிறது’ என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடுப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு நாம் எடுத்துள்ள கூட்டுத் தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் இது. பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும்…

Read More

குண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை !!

குண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை !!

உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்….

Read More

கிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் !!

கிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் !!

இந்த ஆண்டு கிருஷ்ண ஜன்மஸ்தமிக்கு / கோகுலாஷ்டமிக்கு (ஆகஸ்ட் 8) நாங்கள் ஒரு மெகா “நான்-கிருஷ்ணா” போட்டியை நடத்தவுள்ளோம் !! இதில் எல்லா வயதினரும் பங்கேற்கலாம், பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளில் நீங்கள் பங்குபெறலாம்.  ஜன்மாஷ்டமி நாளில் கிருஷ்ணரை வரவேற்க உங்களின் வீடு / பூஜை அறையை அழகாக அலங்கரிக்கலாம் ஜன்மாஷ்டமி பூஜையின் போது உங்கள் வீட்டிலுள்ள கிருஷ்ணரின் விகிரஹத்தை படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்துடன் அலங்கரிக்கலாம் ஸ்ரீ கிருஷ்ணா / கோபிகா / கோபால் போல வேடமணிந்து படம் பிடித்து அனுப்பலாம் (நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தை / குழந்தைகளுக்கு வேடம்போட்டு அலங்கரிக்கவும்) ஜன்மாஷ்டமிக்கு சுவையான பிரசாதம் செய்யுது படைக்கலாம்…

Read More

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட, 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர். இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன. இந்நிறுவனங்களில், 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு, 23 சதவீத வருவாயை, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு…

Read More

தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு ?

தங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு ?

துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஐ.பி., எனப்படும் புலனாய்வு துறையும் விசாரணையை துவக்கியுள்ளன. இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக கிளை அலுவலகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தங்க கடத்தல் நடப்பதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய். ஐக்கிய அரபு…

Read More

சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு !!

சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு !!

திபெத் விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் விசா கட்டுப்பாடு என்ற புதிய யுத்தத்தை துவக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக சீனா அமெரிக்கா இடையே பிரச்னை உச்சநிலையை அடைந்துள்ளது. இதன்காரணமாக இருநாடுகளும் வணிக ரீதியிலான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் திபெத் செல்லும் அமெரிக்கர்களுக்கு சீனா விசா மறுப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ திபெத் பகுதிக்குள் செல்ல வெளிநாட்டினர் அமெரிக்கர்கள் சுற்றுலாபயணிகமள் பத்திரிகையாளர்களுக்கு சீன அதிகாரிகள் அனுமதி மறுத்தால் சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கும் என தெரிவித்து இருந்தார். மேலும்திபெத் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல அமெரிக்க அதிகாரிகள்…

Read More

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!

கொரோனா தொற்றுக்கு மத்தியில், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் ஆனி சிவனுக்குரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. வடமாநிலங்களில் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மத நடவடிக்கைகளை தடை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில், கோவில் பிரசாதத்தை நாட்டின் எந்தவித பகுதிக்கும் அஞ்சல்துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு…

Read More

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

நேபாளத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேபாளத்தில் லாம் மாவட்டத்தில் 2009 முதல் ஸ்ரீ சப்தமய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.இங்கு வேத பாடங்களுடன் நவீன கல்வியும் போதிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு இந்தியா 1.94 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டித் தந்துள்ளது. இதன் திறப்பு விழா ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் நேபாள கல்வித் துறை அதிகாரிகள் இந்திய துாதரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள் மாணவர்கள் தங்க ஒன்பது அறைகள் குழு கல்விக்கு நான்கு அறைகள் கருத்தரங்கு கூடம் வரவேற்பறை உள்ளிட்டவை…

Read More

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக புதிய சாதனையை இந்திய ரயில்வே படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது. ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள் இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் பினாவில், ஒரு சூரிய மின்சக்தி நிலையம் (Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள்…

Read More
1 127 128 129 130 131 256