சர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை

சர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை

சர்வதேச புத்தமத கூட்டமைப்பு சார்பில் நாளை( 4 ம் தேதி) கொண்டாடப்பட உள்ள தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்திய அரசின் கலாசாரத்துறை தலைமையின் கீழ் சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஆசாத் பூர்ணிமா தினத்தை தர்மசக்ரா தினம் கொண்டாடப்பட உள்ளது. புத்த மதத்தவர்களும், இந்து மதத்தவர்களும் தங்களின் குருக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, மனிதர்களின் துன்பங்களை போக்க புத்தர் வழங்கிய போதனைகள் குறித்து வீடியோ மூலம் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், மற்றும் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கின்றனர்….

Read More

இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!

இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து, சீனா தற்போது, பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சீனா பரந்துவிரிந்த நாடு என்பதால், பல்வேறு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ளது; எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக, தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் சமீபத்தில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தற்போது பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின், 58வது கூட்டம் நடந்தது. இதில் சீனா, பூடானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய…

Read More

சீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்

சீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்

ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு வரும் ஜூலை 27ம் தேி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 4 அல்லது 6 ரபேல் விமானங்களை பிரான்ஸின் இஸ்ட்ரெஸில் இருந்து இந்திய விமானிகள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் பொருத்தப்படக் கூடிய மெட்டோர், ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன ஏற்கனவே இந்தியா வந்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் வந்தவுடன், ‘கோல்டன் ஆரோஸ்’ என்ற தனி ஸ்குவாட்ரன் வரும் ஆகஸ்டில் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மொத்தம் 36 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு ஆறு விமானங்கள் வரும் நிலையில்…

Read More

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சி முறையை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அது பரவுவதற்கு காரணமாக இருந்த சீனா இந்தியாவுடன் எல்லையில் தகராறு செய்ததுடன் ஜப்பானின் செங்காரு தீவுக்கும் உரிமை கொண்டாடுகிறது. ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சீனாவின் முயற்சிகளும் சேர்ந்து சீனாவை சர்வதேச சர்ச்சை மையப்புள்ளியாக மாற்றி உள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தும் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக ஜப்பான், இந்தியா, தைவான் மற்றும் திபெத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் டைகர் மேமன், யாகூப் மேமன், யுசுப் மேமன். இவர்களில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2015-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. யுசுப் மேமனுக்கு தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த யுசுப் மேமனுக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார்.

Read More

நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளரும், இலங்கை தமிழ் திரைப்பட கலைஞருமான எஸ்.நடராஜசிவம் நேற்றிரவு காலமானார். நடா அண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 74. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பிறந்த அவர் தனது 20ஆவது வயதுகளில் ஊடகத்துறைக்குள் நுழைந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ‘ரேடியோ சிலோன்’ வானொலி மூலம் தனது ஊடக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1980களில் இலங்கை சினிமாத்துறையிலும் கால் பதித்தார். ‘லாஹிரு தகசக்’ சிங்கள நாடகத்தின் ஊடாக 1985ஆம் ஆண்டு நாடக வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதன்பின்னர் யசோராவய, அவசந்த, வனஸபந்து, யுக விலக்துவ…

Read More

சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?

சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?

‘சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட், 14ல் விடுதலையாவார்’ என, பா.ஜ., பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை, கர்நாடக அரசோ, சிறை நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெ., இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்….

Read More

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

பாக்.,கில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அந்நாட்டு பார்லியில் மேலும் தெரிவித்ததாவது, ‘நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்’ இவ்வாறு கூறினார் அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன்…

Read More

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் தன் உடலில் அரை நிர்வாண ஓவியம் வரைந்த குற்றத்திற்காக ரெஹனா பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் ரெஹானாபாத்திமா.பெண் உரிமைகளுக்காக போராடுவதாக கூறி கொள்ளும் இவர் தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பரபரப்பை உருவாக்கி உள்ளார். சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னைக்காக 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது போல பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தி பரபரப்பை உருவாக்கி வருகிறார். தற்போது தன் இரண்டு (மகன், மகள்) குழந்தைகளை கொண்டு தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து…

Read More

சீனா உடனான பிரச்னை: 73 சதவீதம் பேர் மோடி மீது நம்பிக்கை

சீனா உடனான பிரச்னை: 73 சதவீதம் பேர் மோடி மீது நம்பிக்கை

சீனா உடனான பிரச்னையை ராகுலை விட பிரதமர் மோடி தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த வாரம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னையை யார் திறமையாக கையாளுவர் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் இந்த கருத்து கணிப்பை நடத்தி உள்ளது அதில் கூறப்பட்டுள்ள விபரம் வருமாறு: 72.6 சதவீதம் பேர் இப்பிரச்னையில் பிரதமர் மோடி தலைமை மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 68…

Read More
1 128 129 130 131 132 256