பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் வரும் ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொழில்கள் செழிக்கவும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும் நிகழ்த்தப்படும். உங்கள் ஒவ்வொருவருக்கும் பிரார்த்தனை செய்வோம். உங்களை சங்கல்பத்தில் சேர்க்க +1 647 964 4790 என்ற எண்ணில் உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திறம் (உங்களுக்குத் தெரிந்த விவரங்களை ) வாட்ஸ்அப் செய்யலாம். இது விளக்கத்துடன் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் இருக்கும். இந்த ஹோமம் / யாகத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும் என்பதால் அனைவரும் பயனடைய இந்த செய்தியை உற்றார்,உறவினர், நண்பர்கள் மற்றும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த ஹோமம் முடிந்த பிறகு வீடியோவை…

Read More

டில்லியில் கொரோனாவுக்கு 2,098 பேர் பலி !!

டில்லியில் கொரோனாவுக்கு 2,098 பேர் பலி !!

டில்லியில் மட்டும் கொரோனாவுக்கு 2,098 பேர் பலியாகி உள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. டில்லியில் இன்று(ஜூன் 11) புதிதாக 1,877 பேருக்கு கொரோனா உறுதியானது; 65 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 34,687 ஆக அதிகரித்தது. மொத்த பலியும் 1,085 ஆக உயர்ந்துள்ளது. டில்லி சுகாதாரத்துறை இவ்வாறு தெரிவித்திருக்கையில், டில்லி நகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய் பிரகாஷ், டில்லியில் 2,098 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், டில்லியில் 3 நகராட்சிகளிலும், ஜூன் 10ம் தேதி வரை கொரோனாவுக்கு பலியான 2,098 பேரின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன, அனைத்துமே கொரோனா உறுதி செய்யப்பட்ட சடலங்கள். இவ்வாறு…

Read More

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் இன்று புதிதாக 473 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் மொத்த பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணங்களில் பதிவாகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கனடியர்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புதிதாக 473 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 97,328 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் நோய் பாதிப்புக்கு புதிதாக 64 பேர் பலியாகினர்….

Read More

மூன்றாவது முறை தேதி அறிவிப்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

மூன்றாவது முறை தேதி அறிவிப்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது. வேட்பு…

Read More

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

உலகப் புகழ்பெற்ற பிரான்சின் ஈபிள் டவர் மூன்று மாதங்களுக்குப்பிறகு வரும் ஜூன் 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தின. ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13ல் மூடப்பட்டது. தற்போது பிரான்சில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் ஜூன் 25ம் தேதி, நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் முதல் தளம் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே…

Read More

இந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா ?

இந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா ?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விடாது, இலங்கையில் சைவ மதத்தை பின் பற்றும் தமிழர்களின் முழு ஆதரவோடு இந்திய மத்திய அரசு, விரைவாக செயற்பட வேண்டும். இல்லாதுவிட்டால், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பெளத்த மதத்தை, சீனா தன் கைக்குள் வைத்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் தென் பிராந்திய கடல் எல்லையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது !! இந்தியாவில், பின் பற்றும் பெளத்தமும் மற்றும் இலங்கையில் பின் பற்றும் பெளத்தமும் ஒன்றல்ல. இலங்கையில் பின் பற்றும் பெளத்த கொள்கைகள் எல்லாமே, இந்திய – சீனப் போரில் சீனாவிற்கு இலங்கை உதவி செய்த பிறகு, சீனாவின் பெளத்த கொள்கைகளை இன்றுவரை 100% பின் பற்றி…

Read More

கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

அமெரிக்காவில், இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்தாண்டு துவக்கத்தில், டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. மீண்டும் அவரே அதிபராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது, கள நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. இது குறித்து, அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, அமெரிக்காவில், 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு…

Read More

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

‘கொரோனா தொற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., – எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன், 61, மீண்டும் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, எம்.எல்.ஏ., – ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ‘கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,…

Read More

இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். யுத்தம் நிறைவடையும் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார். பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி…

Read More

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதாவகவும் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பாக்.,கின் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் மனைவி சூபினா ஷெரினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கராச்சியில் அவரின் வீட்டுப் பணயாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பாக்., நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பாக்.,கில் வசித்து வருவதாக கூறப்பட்டாலும், பாக்., அரசு மறுத்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வேதேச பயங்கரவாதியாக…

Read More
1 130 131 132 133 134 256