47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது. ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது. இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்….
Read More









