அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?

அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?

சமீபத்தில், ஹூஸ்டன் நகரில் நடந்த, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பங்கேற்றார். ‘இனி டிரம்ப் அரசு’ என, மோடி பேசினார். அமெரிக்க விவகாரத்தில் தலையிடும் வகையில், மோடியின் பேச்சு இருந்ததாக, காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பேசவில்லை. அவருடைய பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவருடைய பேச்சை திரித்துக் கூறுவது சரியல்ல. ‘கடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இனி டிரம்ப் அரசு’ என, அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, டிரம்ப் பிரசாரம் செய்தார்’ என்று தான், மோடி கூறினார். அமெரிக்காவின்…

Read More

கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

“ பிறைசூடி” ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட கனடாவின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான “கனடா உதயன்” தனது 24 வது ஆண்டில் மிகவும் பெருமையுடனும், அழகாகவும், நேர்த்தியாகவும் எவ்வித குறையும் இன்றி பல் சுவைக் கலை விழாவினை 28-09-2019 சனிக்கிழமை அன்று டொரோண்டோ ஆர்மினியன் இளைஞர் கலை மண்டபத்தில் நடத்தியது. மண்டபத்தை ஓரளவு நிறைத்த பார்வையாளர்கள். சிறப்பு விருந்தினர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறப்புக் கலைஞர்கள், பேச்சாளர்கள். ஊடக, புகைப்பட, வீடியோ நிபுணர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து சிறப்பித்தனர். உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் மற்றவர்களது செயற்பாட்டில் இருந்து வேறுபட்டு எப்போதுமே தனது நிகழ்ச்சிகளை நடத்துபவர்….

Read More

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. அரம்கோ மீதான தாக்குதலால் ஈரான் – சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…

Read More

ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மிகவும் சிறப்பான, அழகிய கலை பரத நாட்டியம் ஆகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக என்றாலும் ஆண்களும் இதனை ஆடுவது உண்டு. சைவ சமயத்தவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமான் கூட நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுகிறது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும். மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆடுவது “ஆனந்ததாண்டவம்’ ஆகும். அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் “ருத்ரதாண்டவம்”. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடுவது “லாஸ்யா” என்று அழைக்கப்படுகிறது. உடல் அசைவுகளும் கை முத்திரையும் சேர்ந்து “அடைவு” ஆகும்.பரதநாட்டியத்திற்குப் பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக் கருவிகள் தேவை. பரதம் நிருத்தம், நிருத்தியம்,…

Read More

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

உலக தமிழ் அழகி போட்டிகளும் முடிசூட்டும் பெருவிழாவும 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு நிகழ்வு தொடர்பான ஊடகச் சந்திப்பு மற்றும் விருந்துபசாரம் ஆகியன நேற்று இரவு நடைபெற்றிருந்தன. கனடாவில் உள்ள வெற்றிகரமான தமிழர் நிறுவனங்களான Vibrant Hospitality Group and AGA Beauty. ஆகியவை இணைந்து வழங்கும் இந்த சர்வதேச அழகுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தமிழ் அழகி என்னும் பட்டத்தைப் பெற்று முடிசூட்டப்படும் ஆர்வத்தோடு பல நாடுகளிலிருந்;து அறிவும் ஆற்றலும் அழகும் அற்புதமும் கொண்ட இளம் தாரகைகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் பல வர்த்தகப்…

Read More

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(21). இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்தார். இரண்டு முறை ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மூன்றாவது முயற்சியாக, மே 5 ல் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யாவை பங்கேற்க வைத்தார். இதில், அவர், 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இணைந்தார். இவர் மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்ததும், தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரியவந்தது.  இது தொடர்பாக கல்லூரி…

Read More

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – ரோகித் சர்மா இணை வந்த வேகத்தில் பிரிந்தது. தென்னாப்பிரிக்க வீரர் ரீஜாவின் பந்துவீச்சில் பியூரனிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு உதவி : வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்க இந்த விவரங்கள் காரணமாகியுள்ளன. ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபரமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வாலடிமீர் ஸெலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன. ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்து வருகிறார்….

Read More

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது எனவும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இந்த விருதை பெற்றுள்ளது நினைவுகூறத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பெரும் மதிப்பிற்குரிய  தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தகுதியானவர்…

Read More
1 158 159 160 161 162 256