எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்

எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார். சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி…

Read More

ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் கைது

ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் கைது

ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிதிநிறுவனத்திடம் ரூ. 740 கோடி கடன் பெற்றனர். எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம்…

Read More

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று ‘ஷாஸ்த்ரா பூஜை’ செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். விமானங்களில் ஆர்பி – 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத்…

Read More

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் உட்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் அசிம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர்….

Read More

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ ஆட்சியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகினர் என்று ஒரு அதிகாரி ஏ.எஃப்.பி கூறினார். பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிகுண்டு ஒன்று விசப்பட்டதாக நங்கர்ஹார் கவர்னர் செய்தித் தொடர்பாளர் அதாவுல்லா கோக்யானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 10 பலியாகினர், மற்றும் 27 பேர் காயமடைந்தனர், என்று அவர் கூறினார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கிய 18-வது ஆண்டு நினைவு நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்

மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துளார். இவருடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்கும் முன் 176 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. தொடக்க வீரராக முதல்முறையாக களமிறங்கி அசத்திய ரோகித் சர்மா – 5 முக்கிய அம்சங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வாலுக்கு இது வெறும் எட்டாவது இன்னிங்க்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரைப்…

Read More

ஜமால் கஷோக்ஜி: சௌதி பத்திரிகையாளர் ‘கொடூரமாக கொல்லப்பட்டதன்’ ஆதாரங்கள்

ஜமால் கஷோக்ஜி: சௌதி பத்திரிகையாளர் ‘கொடூரமாக கொல்லப்பட்டதன்’ ஆதாரங்கள்

இஸ்தான்புல் நகரில் வரிசையாக மரங்கள் நின்றிருந்த அமைதியான ஒரு பகுதி வழியே நான் நடந்து சென்று, நிறைய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்த நிற கட்டடம் ஒன்றை நெருங்கினேன். ஓராண்டுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டிருந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படம் இதே கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும். சௌதி அரேபிய தூதரகத்தில் அவர் நுழைந்தார். அங்குதான் அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் தூதரகத்தை துருக்கி புலனாய்வுத் துறை உளவு பார்த்து வந்தது. இதற்கான திட்டமிடல், கொலை எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒலிநாடாக்களை மிகவும் சிலர் மட்டுமே கேட்டிருக்கின்றனர். அதில் இரண்டு பேர் பிபிசியின் பனோரமா நிகழ்ச்சிக்கு பிரத்யேகப் பேட்டி…

Read More

கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

ராஜஸ்தானில் கேரம் போர்டை எடுத்துச் செல்லாத மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள அன்டா பகுதியை சேர்ந்தவர் ஷப்ரூநிஷா (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், மகனுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஷப்ரூநிஷா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கணவர் ஷாகில் அகமது வழிமறித்துள்ளார். தங்கள் மகனுக்காக கேரம் போர்டை எடுத்துச் செல்லும்படி கூறி உள்ளார். அதற்கு மறுத்த ஷப்ரூநிஷாவை, ஷாகில் அகமது அடித்து துன்புறுத்தியதுடன், அந்த இடத்திலேயே முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அக்.,1 அன்று மாலை கணவர்…

Read More

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர். இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது. இந்நிலையில்,…

Read More
1 157 158 159 160 161 256