பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதியருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின.  சில வீடுகள் இடிந்து விழுந்தன.  அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.  பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன.  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர்.  ஜீலம் கால்வாய் சேதமடைந்து உள்ளது.  அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இந்நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.  300…

Read More

இந்தியாவின் தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவின் தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

இது குறித்து பிரதமர் கூறுகையில் ஹூஸ்டன் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அதிபர் டிரம்ப் எனது நண்பர் மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த நண்பர் எனவும் கூறினார். தொடர்ந்த பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கொள்கையின் மீது மோடிக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கும் மோடிக்கும் இடையேயான கெமிஸ்டிரி ஒத்து போகிறது. இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளது. பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரான் கானும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என நம்புகிறேன். சந்திப்பின் மூலம் நல்ல விசயங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பாக்.,கை மோடி கவனித்துக்கொள்வார் மேலும் அல்குவைதாவிற்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக்கொண்ட பாக்., பிரதமர் இம்ரான்கானின் அறிக்கையை…

Read More

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஷா தின்’ எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர். ஷா தின்னில் காவல் துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல் துறை மீது…

Read More

ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி

ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி

தனியார் பள்ளி கொண்டாட்டம் ஒன்றில் தோலில் பழுப்பு நிறத்தில் வண்ணங்களைப் பூசி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிகழ்வும் இப்போது நடந்தது இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. அந்த சமயத்தில் ஜஸ்டின் கல்வி நிலையம் ஒன்றின் பயிற்றுநராக இருந்தார். இந்த புகைப்படமானது’டைம்’ இதழில் வெளியானது. இதனை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அவர், “அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன்” என்றார். தேசிய கனடிய முஸ்லிம் மன்றம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குநர் முஸ்தஃபா ஃபரூக், “பிரதமரின் இந்த செயல் கவலை தருகிறது….

Read More

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்

இலங்கையில் வரும்  நவம்பர் 16 ஆம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெறும்

இலங்கையில் வரும்  நவம்பர் 16 ஆம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி முதல்  தொடங்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான எஸ்எல்பிபி கட்சி கோத்தபயே ராஜபக்சே தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார். இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்எல்எப்பி ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

Read More

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில்,தமிழகத்தைச் சேர்ந்த இமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஜனாதிபதி பதவி உயர்வு தந்து ஒப்புதல் அளித்தார்.

Read More

பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது. கடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி…

Read More

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்பர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது…

Read More

பார்வையாளர்கள் அதிகரிப்பு: சுதந்திர தேவி சிலையுடன் படேல் சிலையை மோடி ஒப்பீடு

பார்வையாளர்கள் அதிகரிப்பு: சுதந்திர தேவி சிலையுடன் படேல் சிலையை மோடி ஒப்பீடு

குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை (182 மீட்டர் உயரம்) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் இதுபற்றி குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:- படேல் சிலை திறந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 11 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 23 லட்சம் சுற்றுலா பயணிகள் இதுவரை இச்சிலையை பார்த்துள்ளனர். அதாவது, சராசரியாக ஒரு நாளுக்கு 8 ஆயிரத்து 500 பேர் பார்த்து வருகிறார்கள். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 133 ஆண்டுகள் பழமையான சுதந்திர தேவி சிலையை ஒரு நாளுக்கு சராசரியாக 10…

Read More

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது.     இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். “Howdy Modi” நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு…

Read More
1 159 160 161 162 163 256