சுஜித்தை மீட்க போராட்டம் : 55 அடி ஆழ குழிக்குள் வீரர் இறங்கி ஆய்வு

சுஜித்தை மீட்க போராட்டம் : 55 அடி ஆழ குழிக்குள் வீரர் இறங்கி ஆய்வு

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 73 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது 55 அடி ஆழ குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணி மூலம் இறங்கி ஆய்வு செய்தார். ஆழ்துளை கிணற்றின் அருகே அதிநவீன நிலத்தை துளையிடும் ‘ரிக்’ இயந்திரத்தை கொண்டு குழி தோண்டப்பட்டது. கடின பாறைகள் இருந்ததால் தோண்டும் பணி தாமதமாகியது. இதுவரை 55 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், 60 அடிக்கு மேல் மண் இருப்பதாக கூறப்படுகிறது. ரிக் இயந்திரம் மூலம் இரவு 9 மணி வரையில் 55 அடி குழி தோண்டப்பட்டது. பின், மண்ணின் தரம் மற்றும் பாறையின்…

Read More

பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது

பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது

முன்பு திட்டமிட்டபடி பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த தேதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12-ம் தேதியே, பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. இந்த மாத இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது. இந்நிலையில், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காததுடன், வெளியேறுவதற்கான தேதியை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பதை…

Read More

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஸ்டாலின், நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால், ‘முரசொலி’ நிலம் குறித்த பட்டாவை, எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில், மூல ஆவணங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.மூல ஆவணங்களை வெளியிட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும், வெளியிட ஸ்டாலின் மறுப்பது ஏன்? சென்னை அறிவாலயம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., அலுவலகம் அமைக்க, முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

Read More

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. நீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய…

Read More

‘ரூ.800 கோடி’ வரி ஏய்ப்பு: கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறை வழக்கு

‘ரூ.800 கோடி’ வரி ஏய்ப்பு: கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறை வழக்கு

வருமான வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, ‘கல்கி’ சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது,அன்னிய செலாவணி சட்டத்தில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார். இவர், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில், வரதய்யபாளையம் என்ற இடத்தில், பல நுாறு ஏக்கர் பரப்பளவில், கல்கி பகவான் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இதன் கிளைகள், நாடு முழுவதும் உள்ளன; வெளிநாடுகளிலும் உள்ளன. கல்கி சாமியார் என அழைக்கப்படும், விஜயகுமாரை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, 16ம் தேதி, 250க்கும் மேற்பட்ட, வருமான வரி அதிகாரிகள், 40…

Read More

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்த, இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25…

Read More

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார். யார் இந்த கெரி ஆனந்தசங்கரி? இலங்கையின் மூத்த தமிழ்…

Read More

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகியை டுவிட்டரில், இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பாக்.,நாட்டு பாடகியான ரபி பிர்சதா (Rabi Pirzada) என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்து சரமாரியாக கருத்து பதிவிட துவங்கினர். இதில் ஒருவர், இது பாக்.,கின் தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாக்., முழு ஆதரவு அளிப்பது…

Read More

வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், நாளை தீபாவளி கொண்டாடுகிறார். தீபாவளி பண்டிகை, அக். 27ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, 2009 முதல், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவங்கினார்.இதையடுத்து, அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், 2017 – 18களில், தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நவ்ஜீத் சிங்கை, அதிபர் டிரம்ப் அழைத்தார்.இம்முறை மூன்று தினங்கள் முன்னதாக, நாளை நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில், யார் யார் பங்கேற்கவுள்ளனர் என்பது பற்றி, தகவல் வெளியிடப்படவில்லை. அன்றைய தினம்,…

Read More

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் ஆளும் கட்சியின் தலைவர் சஜித் பிரமதேசாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 35 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். 15 மில்லியன் வாக்களர்கள், வாக்களித்து தங்கள் நாட்டு அதிபரை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழுவினர் கடந்த 11 ஆம் தேதி அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் உறுப்பினரான போர்சுகலைச்சேர்ந்த மரிசா மதியாஸ் இக்கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேர்தலை 6–வது முறையாக ஐரோப்பிய யூனியன்…

Read More
1 155 156 157 158 159 256