பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு
இந்தியா-பாக்.இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலால் பாக். மீது இந்தியா கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாக்.நிதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ராவி நதியில் இருந்து உபரிநீரை பகிர்வதை நிறுத்தப்படும். இனி பாக்.கிற்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி…
Read More









