தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை
யாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப்பொருட்கள ஆளுளுஅறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.இந்த முதியோர் இல்லத்திற்கு அவசரமாக பல மருந்துகள் இல்லாது பல நோயாளர்கள் அவதியுறுவதாகவும் அந்த மருந்துப்பொருட்களை தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர் குகபாலன் அவர்கள் முன்னின்று ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்து இன்றைய தினம் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண சமூக சேவை பிரதிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம், வைத்திய கலாநிதி அருள்நேசன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை முதியோர் இல்லம் சார்பாக பெற்றுக்கொண்டார்கள். அறக்கட்டளையின் சார்பாக ஆளுளு இலங்கை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குகபாலன், உதவி ஒருங்கிணைப்பாளர் சந்திரா…
Read More









