‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: விண்ணில் செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனை என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. விண்வெளி துறையில், இந்தியா பெற்றுள்ள திறன், எந்த நாட்டையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தாது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவாலை முறியடிப்பதும் அரசின் கடமையாகும். விண்ணில் பல செயற்கைகோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அவற்றிற்கு நீண்ட தூர ஏவுகணை மூலம், ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ்ரெட்டி…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதில் பிரித்வி ஷா 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து…

Read More

இலங்கை கடலில் மிதந்த 33 பெரிய பொதிகளை கைப்பற்றியது கடற்படை

இலங்கை கடலில் மிதந்த 33 பெரிய பொதிகளை கைப்பற்றியது கடற்படை

உடப்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 33 பெரிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர். இந்த பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கைப்பற்றப்பட்ட பொதிகள் மீட்கப்பட்டு, கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . இதன்போது, குறித்த பொதிகளிலிருந்து ஒரு தொகை புகையிலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர். சுமார் 33 பொதிகளில் பொதியிடப்பட்ட, சுமார் 1232.5 கிலோகிராம் எடையுடைய புகையிலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வருவதற்காக குறித்த புகையிலை பொதியிடப்பட்டு, கடலில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட புகையிலை பொதிகள், புத்தளம் – சின்னபாடு சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில்…

Read More

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை அரசு, அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் புதன் கிழமையன்று இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளரின் உரையைத் தொடர்ந்து இலங்கை வெளி விவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.  இதன் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. ஐ.நா.  நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை. அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அதில்…

Read More

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா…

Read More

தடம் – விமர்சனம்

தடம் –  விமர்சனம்

கதையின் கரு:  சிவில் என்ஜினீயரான அருண் விஜய்யும், நடுத்தர குடும்பத்து பெண் தான்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். நகரில் நடக்கும் ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அருண் விஜய் கைது செய்யப்படுகிறார். அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்தும், உதைத்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில், என்ஜினீயர் அருண் விஜய் போன்ற உருவ ஒற்றுமை உள்ள இன்னொரு அருண் விஜய் குடிபோதையில் ரகளை செய்ததாக கைது செய்யப்பட்டு அதே போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறார். (இவரும், யோகி பாபுவும் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறவர்கள்) என்ஜினீயர், திருடன் இரண்டு பேரில், கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இறுதியில், உண்மையான கொலைகாரனை போலீசார்…

Read More

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கைபர் பக்துன்குவா மாகாண சட்டமன்ற உறுப்பினரான ஷேர் ஆசம் வாசீர் அவையில் பேசும்பொழுது, இந்துக்கள் எங்களுடைய எதிரிகள் என கூறினார்.  இவரது பேச்சுக்கு அங்கு சிறுபான்மை சமூக உறுப்பினர்களாக உள்ள ரவி குமார் மற்றும் ரஞ்ஜித் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும், வார்த்தைகளை தேர்வு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்ட வாசீர், இந்துக்கள் என்பதற்கு பதிலாக இந்துஸ்தான் (இந்தியா) என கூறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின், எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் நம்பிக்கையூட்டி மீண்டும் அவைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி ரவிகுமார் கூறும்பொழுது, பாகிஸ்தானுக்கு பகை நாடாக இந்தியா உள்ளது என்றாலும்,…

Read More

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்த இந்தப் பேரணி, மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகில் ஆரம்பமாகி, காந்தி பூங்கா வரை சென்றது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில், போர்க் குற்றம் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையால் மட்டுமே நீதி கிடைக்கும்’…

Read More

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நகை வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை லண்டன் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையொட்டி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது ஜாமீன் பெறுவார். அதன்பின்னர் அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கும். இந்நிலையில் லண்டனின் அவரை கண்டுபிடித்த…

Read More

குறளரசன் பெயரில் அவதூறு டி.ராஜேந்தர் கண்டனம்

குறளரசன் பெயரில் அவதூறு டி.ராஜேந்தர் கண்டனம்

லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நானும், எனது மகன் குறளரசனும் டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் இல்லை. ஆனால் குறளரசன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி அதில் தவறான செய்தியை பதிவிட்டுள்ளனர். குறளரசனுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் படங்களுக்கு இசையமைக்கும் பணியில் இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதுபோன்று டுவிட்டரில் போலியான செய்தியை அவதூறாக பதிவிட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். லட்சிய தி.மு.க.வை பயன்படுத்தி குறளரசன் மீது அரசியல் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று நான்…

Read More
1 175 176 177 178 179 256