நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா…

Read More

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் முகமது நபி , சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து ஐதராபாத் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Read More

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு, 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. விளையாட்டு நிபந்தனைகளை மீறி, மது போதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக திமுத் கருணாரத்னவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது. கொழும்பு – கிங்சி வீதியில் கடந்த 31ஆம் திகதி திமுத் கருணாரத்னவின் ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில், திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். விபத்தில் முச்சக்கரவண்டி…

Read More

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜோ பிடென் (வயது 76). இவர் 1973-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் செனட் சபை எம்.பி. பதவி வகித்தவர். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதி பதவி வகித்தார். அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39) என்ற பெண் சமீபத்தில் ஜோ பிடென் மீது பரபரப்பு செக்ஸ் புகார் எழுப்பினார். இது குறித்து அவர் அங்கு…

Read More

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை

தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது படநிறுவனத்தின் தயாரிப்பில் சலீம் என்ற தெலுங்கு படம் உருவானது. இதில் மஞ்சு விஷ்ணு, இலியானா டி குரூஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் படம் வெளியானது. இதனை இயக்கியவர் தேவதாசு பட புகழ் இயக்குநர் ஒய்.வி.எஸ். சவுத்ரி. இவருக்கு சேர வேண்டிய சம்பள தொகை ரூ.1.60 கோடிக்கு பதிலாக ரூ.1.10 கோடி பணம் தரப்பட்டு உள்ளது. ரூ.40.50 லட்சம் தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார். ஆனால்…

Read More

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று (ஏப்.2 ) காலமானார். அவருக்கு வயது 79. சிவாஜி முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை படங்களை இயக்கியும், நடித்தும் வந்தவர் மகேந்திரன். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., மூலமாக சினிமா துறைக்குள் வந்தவர் மகேந்திரன். திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக திரைப்பயணத்தை தொடங்கி, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். விஜய்யின் தெறி, ரஜினியின் பேட்ட, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பூமராங் என பல படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் இன்று காலமானார் என்பதை அவரது மகன் ஜான்மகேந்திரன்…

Read More

ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல். ராகுல், சாம் குர்ரான் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் கே.எல். ராகுல் 15 ரன்களும், சாம் குர்ரான் 20 ரன்களும், அடுத்து களமிறங்கிய மயாங்க் அகர்வால் 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக சர்பிராஸ் அகமது உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தால் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் சர்பிராஸ் அகமது 39 ரன்களும், டேவிட் மில்லர் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியினர் சொற்ப ரன்னில் வெளியேற அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20…

Read More

எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா? சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ ஆவேசம்

எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா? சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ ஆவேசம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இதில் ஷிகர் தவானின் அரைசதத்தின் (51 ரன், 47 பந்து) உதவியுடன் டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை சென்னை அணி 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஷேன் வாட்சன் 44 ரன்களும், சுரேஷ் ரெய்னா 30 ரன்களும், கேப்டன் டோனி 32 ரன்களும் (நாட்–அவுட்) எடுத்தனர். இந்த ஆட்டத்தில் 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை அணியின் ஆல்–ரவுண்டரான 35 வயதான வெய்ன் பிராவோ நிருபர்களை…

Read More

குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் நகரில் சர்சா பகுதியில் ஷியாம்லாகாச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரிபா சுல்தானா இதி.  கடந்த பிப்ரவரி 25ந்தேதி இவருக்கு குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைமாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதன்பின் கடந்த 22ந்தேதி அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து உடனடியாக ஆத் தின் என்ற மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வழியே பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதுபற்றி மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஷீலா பொடார் கூறும்பொழுது, இதிக்கு இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை…

Read More

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ்…

Read More
1 174 175 176 177 178 256