நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு உதவியதற்காக சகோதரர் அனில் அம்பானிக்கு , முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார்

நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு உதவியதற்காக சகோதரர் அனில் அம்பானிக்கு , முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார்

எரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை தவிர்த்தார், அனில் அம்பானி.அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ நிறுவனம், தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில், ஸ்வீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தரவில்லை.அதனால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.அதில், ‘ஏற்கனவே கோர்ட்டில் டிபாசிட் செய்த, 118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன் நிறுவனத்திற்கு, 459 கோடி ரூபாய் வழங்க தவறினால், அனில் அம்பானி மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என, பிப்., 20ல் உச்ச…

Read More

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது இரவு வேளைகளில் தாக்குதல் நடத்துவதாக போலிஸ் முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தமது உடலில் காயங்களையும் காட்டியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பதிவாகியுள்ள பல முறைபாடுகள் குறித்து போலிஸார் விசாரணைகளை நடத்திய போதிலும், சம்பவம் தொடர்பில் எந்தவித ஆதாரங்களையும் போலிஸாரினால் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை…

Read More

இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இலங்கை முழுவதிலும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தியிருந்தனர். கடந்த 22 வருடங்களாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 1994ஆம் ஆண்டு காலப் பகுதி வரை, தாம் சிறந்த முறையில் சம்பளத்தை பெற்ற போதிலும், 1994ஆம் ஆண்டு பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாரிய சம்பள முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும்…

Read More

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1990 -ன் பிற்பகுதிகளில், 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக  தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற நிலையில்,  கர்டினல் பெல் மீதான  குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதை அடுத்து, கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான கார்டினல் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகே பரோல்…

Read More

தாதா 87 – விமர்சனம்

தாதா 87 –   விமர்சனம்

வட சென்னை பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆனந்த் பாண்டிக்கு பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் ஆசை. வயதான நல்ல தாதா சாருஹாசன் விருப்பம் இல்லாத பெண்களை தொட்டால் வெட்டுவேன் என்று வெறியோடு இருக்கிறார். சாதிக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார். அதே பகுதியில் மணிமாறன் போதை பொருள் கடத்துகிறார். பாலாசிங் சட்டவிரோத செயல் செய்கிறார். இவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் எம்.எல்.ஏ மனோஜ்குமார். இந்த குடியிருப்பு பகுதிக்கு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜனகராஜ், மகள் ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஆனந்த் பாண்டிக்கு ஸ்ரீபல்லவியை பார்த்ததும் காதல் வருகிறது. பின்னால் சுற்றி காதலை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவியும் காதலை ஏற்கிறார். அப்போது தான் யார் என்ற ஒரு ரகசியதை…

Read More

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

கொழும்பின் புறநகர் பகுதியான மொறட்டுவை பகுதியிலிருந்து சுமார் 1800 மில்லியன் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய சமயத்தில் இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோகிராமிற்கும் அதிக எடையை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், குறித்த வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 3000கும் அதிகமான துப்பாக்கி ரவைகளும், கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 4ஆம் திகதி கைது…

Read More

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

இளைஞர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ள செல்பி மோகம் அவர்களுடைய உயிருக்கே பல நேரங்களில் உலை வைக்கிறது. இது தெரிந்தும் செல்பியால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் ஒருவர் கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்று கையில் காயத்தை வாங்கியுள்ளார்.  அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ படம் எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பையும் தாண்டி கூண்டு அருகே சென்றார். பின்னர் அவர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் ‘செல்பி’ படம்…

Read More

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர். ராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம்….

Read More

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். காஷ்மீரின் புட்காம் மாவட்டம் குவாஸிப்போரா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முகம்மது யாசின், விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு வந்தார். இன்று இரவு அவரை பயங்கரவாதிகள் சிலர் வீடு புகுந்து துப்பாக்கிமுனையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளிடையே செவ்வாயன்று நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது, இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு, தமிழக வீரர் விஜய் சங்கரின் அபார பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த வெற்றி மூலம் 500 போட்டிகளில் வென்ற இரண்டாவது அணி எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது இந்தியா. 1974ஆம் ஆண்டு, ஜூலை 13 தொடங்கி நேற்று வரை 963 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. வெற்றிபெற்ற 500 போட்டிகளைத் தவிர, 414 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா. ஒன்பது போட்டிகளில்…

Read More
1 176 177 178 179 180 256