மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. உள்நாட்டு…

Read More

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

முத்தலாக் முறையை ரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.முத்தலாக் சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து ஜனாதிபதியும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இஸ்லாமிய பெண்களுக்கு…

Read More

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. 1½ நாள் வழிபாட்டுக்கு பின்னர் 43 ஆயிரம் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்தநிலையில், 5-வது நாளான நேற்று பக்தர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், குளம் மற்றும் மாநகராட்சியின் செயற்கை குளம் ஆகிய நீர்நிலைகளில் கரைத்தனர். விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு லாரிகள், சரக்குவேன், தள்ளுவண்டிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும் ஏராளமானவர்கள் தங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்த கணபதி சிலைகளை கையில் ஏந்தியபடியே கொண்டு வந்தனர். அப்போது, வண்ண, வண்ண…

Read More

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிஷப் பிரான்கோ முல்லக்கல், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில், அவரிடம் விசாரணை நடத்திய போது, 15 விஷயங்களில் முரண்பாடு காணப்பட்டது என கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு என்ற இடத்தில் உள்ள சர்ச் நிர்வாக விடுதியில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர், பிஷப் பிரான்கோ முல்லக்கல் 2014ம் ஆண்டு முதல், 2016 வரை 14 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் முல்லக்கல் பதவியை தற்காலிகமாக ராஜினாமா…

Read More

சுவிஸ் வாழ் பத்திரிகையாளர் இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்” நூல் வெளியீட்டு விழா

சுவிஸ் வாழ் பத்திரிகையாளர் இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்” நூல் வெளியீட்டு விழா

இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்”நூல் வெளியீட்டுவிழா சுவிஸ் ஃசெங்காளன்ஃசென் மாக்கிறட்டன் நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழாவை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துச் சென்றமை முக்கிய விடயமாக அங்கு பேசப்பட்டது. ஆங்கு உரையாற்றிய எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் தனது உரையில் பின்வருமாறு அவரைப் பாராட்டினார் “ இங்கு வாழும் அனைவரும் வருகை தந்து நிறைத்தது,ஒரு தமிழ் ஊடகவியலாளருக்குச் சமூகம் வழங்கிய என்றே இன்றைய நிகழ்வை நான் பார்க்க்pன்றேன். நூல்கள் என்பது மொழியின் மானம் என்றார். எனது ஆசான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.எமது மொழியின் ஆடை நெய்ய நூல் செய்த இரா துரைரத்தினம்…

Read More

ரஸ்யா ஏற்பாடு செய்துள்ள ராணுவப் பயிற்சியில் 3 லட்சம் சிப்பாய்கள், 36 ஆயிரம் வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள்

ரஸ்யா ஏற்பாடு செய்துள்ள ராணுவப் பயிற்சியில் 3 லட்சம் சிப்பாய்கள், 36 ஆயிரம்  வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள்

ரஸ்ய நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் ராணுவ பயிற்சியை (வாஸ்டாக்-2018) அந்த நாடு நடத்திவருகின்றது. கிழக்கு சைபீரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 லட்சம் இராணுவ சிப்பாய்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன. மேலும் ரஸ்யப் படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான ராணுவ தளவாடங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த 3,200 வீரர்கள் மற்றும் மங்கோலிய ராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து ரஸ்ய நாட்டின்…

Read More

அமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல்

அமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல்

அதிபயங்கரமான புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஃப்ளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

Read More

ஜலந்தர் கத்தோலிக்க பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார்: கேரள போலீசார் சம்மன்

ஜலந்தர் கத்தோலிக்க பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார்: கேரள போலீசார் சம்மன்

பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க வலியுறுத்தி, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர்…

Read More

சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்

சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்

இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போர் நடந்த பகுதிகளிலுள்ள பெண்களும் தங்களின் சிறப்பு கடன்களை திருப்பிச் செலுத்த சிறுநீரகங்களை (கிட்னிகளை) விற்க முயற்சித்த சம்பவங்களை அறிய வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என மனித உரிமைகளில் வெளிநாட்டு கடனின் பாதிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த சுயாதீன நிபுணர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 3ம் தேதி இலங்கைக்கு வந்த ஜூவான் பப்லோ ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். “கடனை திரும்ப செலுத்த வழியின்றி தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்களை நான் கேள்வியுற்றேன்”…

Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி மரணம்

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
1 192 193 194 195 196 256