சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது – அச்சத்தில் புளோரிடா

சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது – அச்சத்தில் புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை…

Read More

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார்

மீடூ இயக்கம் என்ற  பெயரில்  நடிகர்கள் ,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது  தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. மீடூ விவகாரத்தில்  நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் பிரபலமான  கவிஞர் வைரமுத்து   மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதில் ஒரு பெண், வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்த போது அவர் தன்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது இது குறித்து  கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில்  விளக்கம் அளித்துள்ளார் அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான்…

Read More

Natural Remedies and Illogical Attacks

Natural Remedies and Illogical Attacks

Break a law and you end up in jail. “Ignorance of the law is no excuse” it’s said. So should ignorance of medical facts excuse anyone? Time and time again so-called medical experts publish illogical reports without repercussion. Recently, a physician stated publicly, “There is no case for vitamin supplementation in normal, healthy, non-pregnant adults who are receiving the recommended daily intake of nutrients”. But is this medical fact or fiction? Bill Sardi, a commentator…

Read More

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர் நிக்கி ஹாலே (வயது 46). இந்திய அமெரிக்கரான இவர், அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் மூத்த அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹாலே தனது பதவி விலகலை இன்று அறிவித்து உள்ளார். ஆனால் அதற்கான காரணம் பற்றி அவர் வெளியிடவில்லை. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் அதிபராக டிரம்ப் பதவியேற்று கொண்ட பின் 4 நாட்கள் கழித்து ஹாலேவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டது. தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராகவும் ஹாலே பதவி வகித்துள்ளார்.

Read More

பிரெட் கவானா: பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்

பிரெட் கவானா: பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்

கேவனோ மீது கூறப்பட்ட பாலியல் புகார்கள் “பொய் பிரசாரம்” என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். பிரெட் கேவனோவை நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார் அதனை தொடர்ந்து கேவனோ மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர் ஆனால் தன்மீது கூறப்பட்ட பாலியல் புகார்களை கேவனோ மறுத்து வந்தார். அமெரிக்காவின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 50 உறுப்பினர்கள் பிரெட் கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்திருந்ததை தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்கிறார். இது அதிபர் டிரம்பின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. நீதிபதியின் பதவி உறுதியானதால், இனி வரும் வருடங்களில்…

Read More

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149…

Read More

2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு

2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார். யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். படத்தின் காப்புரிமைMARK WILSON/GETTY IMAGESImage captionநடியா முராத் மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய…

Read More

இந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று டில்லி வருகிறார். பிரதமர் மோடியுடன் நாளை அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே சுமார் ரூ.39,000 கோடி மதிப்புடைய ஏவுகணைகள் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தவிர மேலும் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தம் ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப்…

Read More

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்க பார்லி.,யால் வழங்கப்படும் மிக உயரிய ‘தங்கப்பதக்கம்’ விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பார்லி.,யின் சார்பில் சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படும். இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பார்லி., உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். கடந்த 23ம் தேதி(செப்.,23) தாக்கல் செய்த இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்லி., உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். முன்னதாக இவ்விருது அமெரிக்கர் அல்லாத…

Read More
1 190 191 192 193 194 256