பாக்., தேர்தல்: இம்ரான் கானுக்கு பெரும்பான்மை இல்லை

பாக்., தேர்தல்: இம்ரான் கானுக்கு பெரும்பான்மை இல்லை

நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போதிய பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரை வந்த தகவலின் அடிப்படையில், பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும், மற்றவர்கள் 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.இம்ரான் கானின் பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், அக்கட்சிக்கு…

Read More

ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே

ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10 இடங்களைக் கொண்ட பட்டியலில், அறுகம்பே 8வது இடத்தில் உள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரசே செயலகப் பிரிவில் அறுகம்பே அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் இது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். 1996ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அறுகம்பே, சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. அறுகம்பே இயற்கையினால் அழகு நிறைந்த பகுதியாகும். குறிப்பாக, இங்குள்ள…

Read More

பாக்.கில் துவங்கியது ஓட்டு எண்ணிக்கை : இம்ரான் கட்சி முன்னிலை

பாக்.கில் துவங்கியது ஓட்டு எண்ணிக்கை : இம்ரான் கட்சி முன்னிலை

பாகிஸ்தானில், இன்று நடந்து முடிந்த பொதுதேர்தலில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சி முன்னிலை வகிப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. பாகிஸ்தானில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல், இன்று காலை துவங்கி நடந்து முடிந்தது. நாடு முழவதும். 85 ஆயிரம் ஓட்டுப் பதிவு மையங்களில், மக்கள் ஓட்டளித்தனர்.இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. பாக்.பார்லி.யில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு…

Read More

பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை

பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை

பத்தினம் திட்டா: கேரளாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்ட பெண் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து புகார் சம்பங்கள் கேரளாவில், பாவ மன்னிப்பு பெற்ற பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கற்பழிப்பு செய்த புகார்; கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 14 முறை கற்பழித்தது உள்ளிட்ட அதிர்ச்சி சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புதிய விவகாரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பெண் லில்லி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை…

Read More

120 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

120 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக இருந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 14-வது நாளாக நீடித்தது. கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும்…

Read More

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார். உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர்…

Read More

அமெரிக்கா வாருங்கள்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்கா வாருங்கள்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு டிரம்ப் அழைப்பு

வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த திங்கள்கிழமை நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாட்டின் நிறைவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் அளித்த ஒரு பதில் அமெரிக்காவில் அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. மறுநாள் அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். ஒரு வார்த்தை மாறிவிட்டது என்றார். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இப்பிரச்சனையை தொடக்கத்தில் இருந்து புரிந்துகொள்ள இச்செய்திகளைப் படிக்கலாம்:…

Read More

‘இனி இது யூத தேசம்’: மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம்

‘இனி இது யூத தேசம்’: மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம்

இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம். இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது. இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவினை கண்டித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த மசோதாவினை வரவேற்று உள்ளார். இதனை முக்கியமான தருணம் என்று போற்றியுள்ளார். 2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி புகைப்பிடிக்காதோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஏன்? இந்த மசோதாவினை அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் ஆதரித்து உள்ளது….

Read More

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு : கண்டனம் தெரிவிக்க டிரம்ப் மறுப்பு

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு : கண்டனம் தெரிவிக்க டிரம்ப் மறுப்பு

உலகின் மிகப் பெரும் அணு சக்தி உடைய நாடுகளான, அமெரிக்கா – ரஷ்யா இடையே, பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, அந்நாட்டின் உளவுத்துறை குற்றஞ்சாட்டியது.இது தொடர்பாக, ரஷ்ய உளவாளிகள், 12 பேர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், சமீபத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தவிர, சிரியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும், அமெரிக்கா – ரஷ்யா இடையே, கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக, கடந்த மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடின் விருப்பம் தெரிவித்ததார்; இதை, டிரம்பும் ஏற்றுக்கொண்டார்.இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில்…

Read More

திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்

திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவரும் கனடாவில் மிக நீண்டகாலமாக வாகன அதிவேக செலுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கும் வகையில் தன்னிடம் வரும் சாரதிகளை சட்டத்தின் மூலம் காப்பாற்றுவது அவர்களுக்கு வழங்கப்படும் தணடனைகளை குறைப்பது போன்ற வர்த்தக துறையில் (TRAFFIC TICKET ) பணியாற்றியவரும் திரு சுதர்சன் அவர்கள் தனது பிறந்தா நாளை முன்னிட்டு ஸ்காபுறோ ஶ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்த்தானத்தில் விசேட பூசை ஒன்றுக்கு எற்பாடு செய்திருநதார். அன்றைய தினம் அவரது நண்பர்கள் உறவினர்கள் என பலர் அங்கு கலந்து கொண்டனர். திரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் அங்கு இடம்பெற்ற பெற்றன. பூசைகள் அனைத்தை ஆலயத்தின் பிரதம குரு…

Read More
1 196 197 198 199 200 256