திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு; சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு; சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

திருமலை – திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், ஒரு வாரத்துக்குள் வழக்கு தொடரப் போவதாக, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி அறிவித்துள்ளார். திருப்பதி,தேவஸ்தானம்,வழக்கு,Subramanian swamy,சுப்பிரமணியன் சாமி,பா.ஜ,B.J.P,BJP ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருமலை – திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு எதிராக, ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர், ரமண தீட்சிதர், சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார். ஏழுமலையான் ஆபரணங்கள் மாயமானதாகவும், நிலவறையில் உள்ள பொக்கிஷங்களை எடுக்க, மடப்பள்ளியின் தரை தளத்தை தோண்டியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில், இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: திருமலை தேவஸ்தானத்தில்,…

Read More

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு அயிட்டகளையும் மெனுவாக வைத்துள்ளன. இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியா்கியுள்ளது. இந்தியாவில் ஜெயின் மத உணவு அயுிட்டங்கள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு அயிட்டங்கள் இனி அந்த மெனுவில் இருந்து வாபஸ் பெற்றது.

Read More

டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்

டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என இரு கோணங்களிலும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகு தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் எந்தவித இறுதி முடிவுக்கும் வரவில்லை என்றும் குற்றவியல் பிரிவு போலீசார் கூறுகின்றனர். 11 சடலங்களின் உடற்கூறாய்வு மெளலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்தானம் செய்ய ஒத்துக்கொண்டிருந்தாலும், 11 பேரில் ஆறு பேரில் கண்களை மட்டுமே தானமாக பெற முடிந்தது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த…

Read More

ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் இறந்ததை தொடர்ந்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள், இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆப்கனில் கடந்த 1990ம் ஆண்டுகளுக்கு முன் 250,000 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் வசித்து வந்தனர். ஆனால், தற்போது, 300 சீக்கிய குடும்பத்தினர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க அதிபரை சந்திக்க சென்ற போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சீக்கியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சீக்கியர்களில் பலர் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆனால், சிலர், ஆப்கன் தான் சொந்த நாடு எனக்கூறி, அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர். சீக்கிய அமைப்பின் சிலர்,…

Read More

மனைவி வேண்டாம்: கணவர்கள் பூஜை

மனைவி வேண்டாம்: கணவர்கள் பூஜை

மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டனர். வட மாநிலங்களில் வட் பூர்ணிமா என்ற பண்டிகை மிகவும் பிரபலம். அன்றைய நாளில், திருமணமான பெண்கள் விரதமிருந்து, தங்களது கணவர்கள் நலமுடன் வாழவும், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டி கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள். நேற்று (ஜூன் 27) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள கோயில் ஒன்றில், கணவருக்காக பெண்கள் விரதமிருந்து மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினர். மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அதே மரத்தை எதிர்திசையில்…

Read More

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பெரு அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இதில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பாவ்லோ குயரேரோ உதவியுடன் பந்தை பெற்ற ஆன்ட்ரே காரில்லோ, பாக்ஸின் வலது புறத்தில் இருந்து கோல்கம்பத்தின் இடது புறத்தில் பந்தை திணிக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில்…

Read More

கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது?

கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது?

கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, ஐந்து பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுமுறையில் செல்லும்படி, அந்த ஐந்து பாதிரியார்களுக்கும், சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர். இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஒருவர் கேட்ட பாவ மன்னிப்பை, மற்றவர்களிடம் சொல்ல கூடாது. ஆனால், என் மனைவி கேட்ட, பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி, ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர், பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது…

Read More

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதை

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதை

கரிகாலன் ரஜினிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ரோபோ விஞ்ஞானி வசீகரன் ரஜினி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற விசாரணையைத் தொடங்கினோம். ‘2.0’ படக்குழுவின் கிராஃபிக்ஸ் குழு வட்டாரத்திலிருந்து மூச்சு முட்டுகிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும்முன் ‘2.0’ படத்தின் கதைக்களம் பற்றி விசாரித்தால் அசரடிக்கும் தகவல் காதுகளை எட்டியது. இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதைக்களம். அந்த இரண்டு ரோபோக்களில் ஒன்று விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது. அதற்கு அனைத்து உணர்ச்சிகளும் வந்துவிடுகின்றன. அந்த இன்னொரு ஸ்வீட் ஹார்ட் ரோபோ பற்றிய தகவல் பரம ரகசியம் என்கிறார்கள். இதில் அக்‌ஷய்குமார் எப்படிப்பட்ட வில்லன் என்பது சஸ்பென்ஸ் என்கிறது இயக்குநர் வட்டாரம்….

Read More

ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்ற வைபவம்

ஏராளமான பக்தர்கள் சிவாச்சாரியப் பெருமக்கள், வர்த்தக நண்பர் சமூக சேவையாளர்கள் என பலரும் கூடி பக்தி மேலோங்கி உருகி நிற்க விநாயகப் பெருமானின் உற்சவ ஆரம்பத்தின் கொடி யேறி கம்பத்தின் உச்சிக்கு சென்று அலங்கரித்தது. ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் சிரேஸ்ட மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஞ◌ாயிற்றுக்கிழமை மாலை இந்துக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று நிறைவுற்ற பினனர் வெற்றிக் களிபபுடன் காணப்படுகினறார்கள் இங்கு அதிபரும் ஸ்தாபகருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ,அவரது பாரியார் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியோர்

Read More

மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்காமல், சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் அருகில் உள்ள மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஏராளமானோர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கேயே தங்கி விடுகின்றனர். இதை தடுக்க, அதிபர், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, சமீபத்தில் கடுமையான விதிகளை அமல்படுத்தியது. அதன்படி, அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவோர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேசமயம், அவர்களுடன் வந்த, அவர்களது குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு, எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும்…

Read More
1 198 199 200 201 202 256