கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து – 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் இன்று பயங்கர வெடிவிபத்து மற்றும் தீ விபத்துகளும் ஏற்பட்டன. ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி நிலையம், மின் கம்பிகள், ரெயில் பாதைகள் மற்றும் சில அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்து 2000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்ட்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் 9ம் தேதியன்று கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ விமானதளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு…
Read More









