எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்: பங்குதாரர்கள் ‘பச்சைக்கொடி’

எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்: பங்குதாரர்கள் ‘பச்சைக்கொடி’

டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கிடம் விற்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பங்குதாரர்களின் முடிவை எலான் மஸ்க் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அக்டோபரில் விசாரணைக்கு வருகிறது….

Read More

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சர்ச்சை கருத்து கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உச்சிநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ.விலிருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசாரிடம் ஒப்படைக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா…

Read More

ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர். 1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார். அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று…

Read More

10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய

நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய

வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர். இதை தொடர்ந்து ஜூலை 13ல், அதிபர் கோத்தபய ராஜபக்சே தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.பின் அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான…

Read More

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு என தகவல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு என தகவல்

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது. சென்னை, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், வக்கீல்…

Read More

உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்

உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்

கீவ் -மருத்துவ படிப்பை முடிக்க, உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடன உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். போர் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிய நிலையிலும், உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக மருத்துவம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடுமையான போர்ச் சூழலுக்கு மத்தியிலும்,தற்போது மீண்டும் மருத்துவ படிப்பை தொடர, மாணவர்கள் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர். இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த…

Read More

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாடநுால் கழகத் தலைவர் லியோனி, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ‘ஹிந்து மதத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்ற மணி விழா நிகழ்ச்சியின் போது, தம்பதியை மணிக்கணக்கில் அமர வைத்து ஹோமம் நடத்துவர். ‘அப்போது, புரியாத மந்திரங்களை சொல்லி, அவர்களை இம்சை செய்வர். ௬௦ ஆண்டுகளாக பட்ட துன்பம் போதாதென்று, இந்த தொல்லை வேறா என்று, கணவருடன் மனைவி சண்டை போடுவார்’ என, குதர்க்கமாகப் பேசி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார், ஆபாச பேச்சாளர் என பெயர்…

Read More

எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்த டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். தங்களுடைய கட்சியில் சேர்ந்தால் தலா ரூ. 20 கோடியும், மற்றவர்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி தருவதாகவும் ஆம் ஆத்மி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ., விலை பேசியதாகவும். இல்லா விட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை வாயிலாக நெருக்கடி தரப்படும் என மிரட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை (ஆக.25)…

Read More

ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள யாத்திரை பிரசாரத்திற்காக அக்கட்சி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தங்களுடையது எனக்கூறி ஆம்ஆத்மி கட்சி கிண்டலடித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) என்ற பெயரில் யாத்திரை செல்ல உள்ளார். 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் இன்று (ஆக.,23) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத் ஜோடோ யாத்திரைக்கான லோகோ, அடையாள முழக்கம், தீம் பாடல் ஆகியவற்றை காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்டனர்….

Read More
1 57 58 59 60 61 256