தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,00,342 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,013 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,691 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை…

Read More

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

அண்ணாத்த படம் திரைக்கு வந்த நிலையில் ரஜினிகாந்துக்கு லேசான உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார். ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பேசினார். இதனால் ரஜினியின் புதிய படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சில இயக்குனர்களையும் அழைத்து ரஜினி கதை கேட்டதாக தகவல் வெளியானது. தேசிங்கு பெரியசாமியுடன் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், படையப்பா, லிங்கா…

Read More

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறியப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Read More

பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது

பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டின் 114வது தேசிய நாள் இன்று(டிச.,17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதை அந்நாடு அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் லோடோய் ஷெரீங் வெளியிட்ட அறிக்கையில்,’பூடானின் உயிரிய விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்,’ எனக்கூறப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், பூடானுக்கு நிபந்தனையற்ற நட்புறவையும், ஆதரவையும் மோடி வழங்கினார். விருதுக்கு அவர் தகுதியானவர். பூடான் மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஆலோசனைகளின் போது, சிறப்பான மற்றும் ஆன்மீகவாதியாக உங்களை பார்த்தோம்….

Read More

அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – ஒ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – ஒ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, கனிகள் விலை உயர்வு என்ற வரிசையில் தற்போது மீன்களின் விலையும், மீண்டும் கட்டுமானப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த விலைவாசியையும், தற்போது விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் 2 மடங்கு, 3 மடங்கு உயர்ந்துள்ளது என்பது தெளிவாக தெரியவரும். இதன் மூலம் மக்கள் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்வது,…

Read More

ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக்…

Read More

பிரதமர் தலைமை மீது நம்பிக்கை எதிரொலி; மராட்டிய மேலவை வெற்றி: ஜே.பி. நட்டா பேச்சு

பிரதமர் தலைமை மீது நம்பிக்கை எதிரொலி; மராட்டிய மேலவை வெற்றி: ஜே.பி. நட்டா பேச்சு

மராட்டிய மேலவை தேர்தலில் மொத்தம் 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை பா.ஜ.க. வென்றது.  இதுபற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசும்போது, மராட்டிய மேலவை தேர்தலில் பெற்ற வெற்றியானது பிரதமர் மோடியின் தலைமை, அவரது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என பேசியுள்ளார். இதற்காக பா.ஜ.க.வின் மராட்டிய தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அனைத்து மராட்டிய பா.ஜ.க. தொண்டர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Read More

ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில்,  25 நாட்களுக்குப் பிறகு  ஆர்யன் கானுக்கு  மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வாரந்தோறும் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,  வாரந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, போதைப்பொருள் வழக்கு விசாரணை, டெல்லி…

Read More

அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

’அமைதி மற்றும் வளர்ச்சிநிறைந்த தெற்கு ஆசியா’ என்ற தலைப்பில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். கருத்தரங்கள் அமெரிக்கா – சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். இம்ரான்கான் பேசுகையில், பனிப்போர் நோக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன. இந்த குழுக்கள் உருவாகுவதை தடுக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். எனென்றால், எந்த குழுக்களுடனும் நாம் இணையக்கூடாது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் சிறந்த உறவு கொண்டுள்ளது. அந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் அதிகரித்து வரும் விரிசலை நிறுத்த பாகிஸ்தான் பாலமாக செயல்பட விரும்புகிறது’ என்றார்.

Read More

இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 14 பேர் உயிரிழப்பு

இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 14 பேர் உயிரிழப்பு

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம்…

Read More
1 68 69 70 71 72 256