பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில், வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. அதே வேளையில், காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியுள்ளது. பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்…

Read More

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது- உயிரிழப்பு அதிகம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது- உயிரிழப்பு அதிகம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 64 ஆயிரத்து 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 264 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்….

Read More

பொங்கல் பரிசு புகார்; காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் பரிசு புகார்; காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட முதல்-அமைச்சர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்கள். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள் தரமானதாகவும், எண்ணிக்கை குறைபாடு இல்லாமலும் இருக்க வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, அதற்கு முறையான விதிமுறைகளை…

Read More

50 சதவீத சிறுவர்கள் தடுப்பூசி போட்டனர்: இளைய தலைமுறை வழி காட்டுகிறது மோடி பெருமிதம்

50 சதவீத சிறுவர்கள் தடுப்பூசி போட்டனர்: இளைய தலைமுறை வழி காட்டுகிறது மோடி பெருமிதம்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதம்பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும்வகையில், பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-இளைய தலைமுறை வழி காட்டுகிறது. இது ஊக்கம் அளிக்கும் செய்தி. இதே உத்வேகத்தை கடைபிடிப்போம். தடுப்பூசி செலுத்துவதும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதும் முக்கியம். நாம் ஒன்றாக இந்த தொற்றை எதிர்த்து போராடுவோம்.

Read More

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் மந்திாி ராஜேஷ் தோபே தகவல்

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் மந்திாி ராஜேஷ் தோபே தகவல்

லதா மங்கேஷ்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திாி ராஜேஷ் தோபே கூறியுள்ளார். பாடகிக்கு கொரோனா பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் வசித்து வருகிறார். 92 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் தென்மும்பையில் உள்ள பிரிச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறிகள் மட்டும் உள்ள போதும், வயது மூப்பின் காரணமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதாக டாக்டர்கள் கூறியதாக லதா மங்கேஷ்கரின் உறவினர் ராச்னா ஷா கூறியிருந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் இந்தநிலையில் லதா…

Read More

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றார். இதனையடுத்து மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படும். இதன்படி இன்று மதியம் இந்த பூஜை நடைபெற்றது….

Read More

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் – பிரதமர் மோடி பேச்சு

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, நாடு முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் 92% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 70% பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. நாட்டில் தொண்ணூற்று இரண்டு சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். முந்தைய கொரோனா தொற்றுகளுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம்,…

Read More

“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு!

“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு!

புதுடெல்லி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகையில் மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ரூ. 24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுய்களுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி பேசியதாவது:- தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் பேசி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது…

Read More

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா

லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜனவரி 10, 2022 16:21 PM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. அந்த வகையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், லேசான அறிகுறிகளுடன் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ள்ளேன். சமீபத்தி என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”…

Read More

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

அடாவடிக்கு பெயர் போன நாடாக சீனா மாறி வருகிறது. ஒற்றை கட்சி ஆட்சி என்பதாலோ என்னவோ, உலகத்துக்கே தான் வைத்தது தான் சட்டம் என்ற நினைப்பு, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வந்து விட்டது போலும். பதிவு: ஜனவரி 05, 2022 08:38 AM ஒரு பக்கம் தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம், இந்தியாவுடன் சீனாவுக்கு நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிற சூழலில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கிறது. கல்வான் தாக்குதல் இதற்கிடையேதான் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படைகளுடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கில் சீன துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அதே ஆண்டின்…

Read More
1 66 67 68 69 70 256