கட்சி காரர்களாலும்… வதந்தி பரப்பி பணம் செய்யும் இந்திய டிவி கம்பனிகளுக்கு ஆப்பு ?

கட்சி காரர்களாலும்… வதந்தி பரப்பி பணம் செய்யும் இந்திய டிவி கம்பனிகளுக்கு ஆப்பு ?

பழைய சட்டங்களையே தொடர் வேண்டும் கடந்த இருபது வருஷங்களாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை சட்டத்தின் பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தேமே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.நன்றாயிருக்கிறது உங்கள் வேண்டுகோள் …. பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின், ‘டிஜிட்டல் செய்தி’ தளங்களுக்கு என, ஏற்கனவே பல சட்டங்கள், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள், வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில், 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், டிஜிட்டல் செய்தி தளங்கள் வைத்துள்ள பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிரானது. அத்துடன், புதிய சட்டத்தை பின்பற்றுவதற்கு தேவையான…

Read More

இஸ்ரேலிடம் இருந்து வாங்கும் உளவு விமானங்களை சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் : இந்தியா

இஸ்ரேலிடம் இருந்து வாங்கும் உளவு விமானங்களை சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் :  இந்தியா

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்தன. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வந்தது. இதற்கிடையில், போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்திய-சீன ராணுவ மட்டத்தில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டத்தை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் குவித்து வைத்திருந்த படைகளை திரும்பப்பெற்றுள்ளன. ஆனாலும், பதற்றம்…

Read More

கிறிஸ்துவ மிஷினரிகள் சார்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும் தி.மு.க – ஹிந்து முன்னணி

கிறிஸ்துவ மிஷினரிகள் சார்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும் தி.மு.க – ஹிந்து முன்னணி

‘சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும், தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:கோடிக்கணக்கான மக்கள், குருவாக ஏற்ற சத்குருவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவன், இவன் என பேசி, சில மாதங்களுக்கு முன் காணொலி வெளியிட்டதை மக்கள் கண்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் துன்பப்படும் சூழலில், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம், மூடப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு என்ன நிவாரணம் தரலாம் என யோசிக்காமல், ஈஷா, சத்குருவை சாடுவதும், கைதுசெய்வோம் என கூறுவதும் காழ்ப்புணர்வை காட்டுகிறது. சத்குருவின் கோவில் அடிமை…

Read More

பேஸ்புக், டுவிட்டருக்கு இந்தியாவில் தடை வருமா ?

பேஸ்புக், டுவிட்டருக்கு இந்தியாவில்  தடை வருமா ?

இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021ன் கீழ் செயல்படாத காரணங்களால் நாளை (மே 25) முதல் டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் ‛டூல்கிட்’ விவகாரம் தொடர்பாக டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான செய்திகள் டிரெண்டானது. பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், ‘டூல்கிட்’ ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த ஆவணங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரிய புயலைக் கிளப்பிய நிலையில்,…

Read More

பாகிஸ்தானில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி

பாகிஸ்தானில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமின் அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தினர். காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்தனர். 11…

Read More

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமான சேவை தடை நீட்டிப்பு: கனடா அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமான சேவை தடை நீட்டிப்பு: கனடா அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றின் 3வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளிலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு வரும் ஜூன் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு 30 நாட்கள் தடை விதித்து கனடா அறிவிப்பு வெளியிட்டது. இந்த தடை உத்தரவு இன்று (22ந்தேதி) முடிவுக்கு வரும் நிலையில் கூடுதலாக 30 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையுத்தரவு,…

Read More

சீனாவின் 2022 ஒலிம்பிக்கை புறக்கணிக்க நான்சி பெலோசி அழைப்பு

சீனாவின் 2022 ஒலிம்பிக்கை புறக்கணிக்க நான்சி பெலோசி அழைப்பு

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சீனா நாட்டின் பெய்ஜிங்கில் நடைபெறும் 2022 குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அழைப்பு விடுத்து உள்ளார். சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சித்து உள்ளார்.மேலும் இதில் கலந்து கொள்ளும் உலகளாவிய தலைவர்கள் தார்மீக அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று கூறி உள்ளார். மேலும் அவர் கூறும் போது நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்று சீன அரசாங்கத்தை மதிக்க வேண்டாம்.நடந்துகொண்டிருக்கும் ஒரு இனப்படுகொலையின் வெளிச்சத்தில் நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குச் செல்வது உங்கள் கவுரவ்த்திற்கு கேள்விக்குரியது என கூறி உள்ளார். சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யூ ராய்ட்டர்ஸிடம், ஒலிம்பிக்கில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்கா மேற்கொண்ட…

Read More

“தலைமை சரியில்லை “கமல்ஹாசன் கட்சியில் இருந்து வெளியேறிய மற்றொரு முக்கிய நிர்வாகி

“தலைமை சரியில்லை “கமல்ஹாசன் கட்சியில் இருந்து வெளியேறிய மற்றொரு முக்கிய நிர்வாகி

சட்டசபை தேர்தல் தோல்விக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர் விலகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலராக இருந்த முருகானந்தம் திருச்சியில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: – கட்சியில் இணைந்த போது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டது. இதனால், கட்சியில் என்னால் முழுமையாக உழைக்க முடிந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் அற்றுபோய் விட்டது. கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை…

Read More

கொரோனா தொற்று 8 நாள் சிகிச்சைக்குப் பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்

கொரோனா  தொற்று 8 நாள் சிகிச்சைக்குப் பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்

சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பின் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார்.இந்தநிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிலேயே ரங்கசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் நெருக்கமாக இருந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையொட்டி ரங்கசாமியும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. உடனடியாக கடந்த 9-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரங்கசாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 8 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் குணமடைந்ததை தொடர்ந்து…

Read More

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜிகாத் தீவிரவாத அமைப்பின் தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஜிகாத்  தீவிரவாத அமைப்பின் தளபதி பலி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் தீவிரவாதியினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி…

Read More
1 91 92 93 94 95 256