‘பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மத்திய அரசு தயார்’

‘பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மத்திய அரசு தயார்’

”பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது; அதுபோல மாநில அரசுகளும் வரியை குறைக்க முன்வர வேண்டும்,” என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு, உற்பத்தி வரியும், மாநில அரசுகள், மதிப்பு கூட்டு வரியும் விதிக்கின்றன. கடந்த ஆண்டு, மார்ச்சில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,425 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 4,875 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மத்திய, அரசு, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளது.அதேபோல, மாநில அரசுகளும், வரியை குறைப்பது குறித்து சிந்திக்க…

Read More

உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி!

உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி!

புது டில்லி: 2021-ல் உலகளவில் அதிக செல்வம் ஈட்டிய நபர்களில் அமேசானின் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானி முதலிடம் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து, 3.6 லட்சம் கோடியாகியுள்ளது. இதன் மூலம் அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபராகியுள்ளார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்துக்கு போட்டியிட்ட அமேசானின் ஜெப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு அதானி குழும பங்குகளில்…

Read More

திமுக வேட்பாளர் பட்டியல்: கொளத்தூரில் ஸ்டாலின்- சேப்பாக்கத்தில் உதயநிதி

திமுக வேட்பாளர் பட்டியல்: கொளத்தூரில் ஸ்டாலின்- சேப்பாக்கத்தில் உதயநிதி

சென்னை: 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர். இன்று வெளியான பட்டியலில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சில தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட நபர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மட்டும், 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், 187 தொகுதிகளில், தி.மு.க.,களமிறங்குகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களுக்கான தொகுதி எண்ணிக்கை முடிவாகி உள்ளது. 234 தொகுதிகளில், 47 தொகுதிகளில், தனி சின்னத்தில், கூட்டணி கட்சிகள்…

Read More

தி.மு.க., காங்.,தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து

தி.மு.க., காங்.,தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து

இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் வரும் 6 ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, காங்கிரஸ் கட்சி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர்(தனி), சோளிங்கர், ஊத்தங்கரை(தனி),ஓமலூர், ஈரோடு கிழக்கு, விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி(தனி),கோவை தெற்கு,உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, திருவாடனை, மேலூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி), தென்காசி,ஸ்ரீவைகுண்டம்,நாங்குநேரி, விளவங்கோடு, குளச்சல், உதகை, கிள்ளியூர், உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளும்,கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளான கோவை தெற்கு, விளவங்கோடு, உதகை வேளச்சேரி, காரைக்குடி, ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவ…

Read More

கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கம் நிறைந்தவர்களாக இருப்பர்: மோடி

கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கம் நிறைந்தவர்களாக இருப்பர்: மோடி

புதுடில்லி: பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும் மற்றும் ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பகவத் கீதை நம்மை சிந்திக்க தூண்டுகிறது. நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும். நம்முடைய மனம் திறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும் மற்றும் ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பார்கள். கடந்த காலத்தில் உலகத்திற்கு மருந்துகள் தேவைப்பட்டபோது, இந்தியாவால் என்ன முடியுமோ அவற்றை அவர்களுக்கு வழங்கியது. இந்தியாவில்…

Read More

பாகிஸ்தானுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியா

பாகிஸ்தானுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு இலவசமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து, பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீத மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகள் கண்டறிந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த தடுப்பூசிகள் 65 நாடுகளுக்கு சப்ளை செய்து வருகிறது. ஏழ்மையில் உள்ள ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், பூட்டான் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள்…

Read More

காங்.,கில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்; காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என குற்றச்சாட்டு

காங்.,கில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்; காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என குற்றச்சாட்டு

புதுடில்லி: கேரளாவை சேர்ந்த காங்., மூத்த தலைவர் பி.சி.சாக்கோ, அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், காங்கிரசில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.சி.சாக்கோ (வயது 74). கேரளாவைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். கேரளாவில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவிற்கு அனுப்பியுள்ளேன். கடந்த பல நாட்களாக இந்த முடிவைப் பற்றி நான் ஆலோசித்து வந்தேன். கேரளாவில் காங்கிரஸ்…

Read More

2ம் நாளாக எதிர்க்கட்சிகள் ஆவேசம்: பார்லிமென்ட் மீண்டும் ஒத்திவைப்பு

2ம் நாளாக எதிர்க்கட்சிகள் ஆவேசம்: பார்லிமென்ட் மீண்டும் ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விவாதத்தை, நடத்தியே தீர வேண்டும்’ எனக்கூறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கியதால், பார்லிமென்டின் இரு சபைகளுமே ஒத்தி வைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வுக்காக, நேற்று முன்தினம் கூடிய, பார்லிமென்ட், முதல் நாளிலேயே, அலுவல்களை, முற்றிலுமாக மேற்கொள்ள முடியாமல் தவித்து, அடுத்தடுத்துஒத்திவைப்புகளை சந்திக்க நேர்ந்தது.இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்றும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை கையிலெடுத்து, ‘விவாதம் கண்டிப்பாக தேவை’ என, மீண்டும், ‘நோட்டீஸ்’ தந்திருந்தனர். காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா, திரிணமுல் என, முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தனித்தனியாக கோரிக்கைவைத்திருந்தனர்.ஆனால், லோக்சபாவின் சபாநாயகர் ஓம்பிர்லாவும், ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையாநாயுடுவும்,…

Read More

Maha Mrityunjaya Mantra – Linga Abhishekam..108 Chants & Naivedyam

பிரதோஷம் மார்ச்10 ஆம் தேதி வீடியோவைக் கிளிக் செய்து மார்க்கண்டேய மஹாமந்திர ஜெபத்தை கண்டு சொல்லவும். சூரிய அஸ்தமனத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் மாலையில் குளித்துவிட்டு 108 முறை மார்க்கண்டேய மஹாமந்திர ஜெபத்தை வீடியோவில் காட்டியவாறு செய்யவும் ?? https://youtu.be/_YBxbApNliA ?? சிவனுக்கு பிரதோஷத்தில் நோன்பும் பிரார்த்தனை செய்து நந்தி சேவை செய்தால் உங்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேறும் … விஷேச பலன்களை அல்லித்தரும் !! உங்கள் சார்பாக நந்தி சேவை செய்யவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு…

Read More

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்

திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார். மே.வங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆளும் திரிணமுல் காங்கிரசில் இருந்து பல முக்கிய தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோல்கட்டாவில் நடக்கும், பா.ஜ.,வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்ட மேடையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, மாநில தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, பா.ஜ., பொது செயலர் கைலாஷ்…

Read More
1 100 101 102 103 104 425