பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார் – முதல்வர் இ.பி.எஸ்
”பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார். நடிகர் கமல் ஓய்வு பெற்ற பின், அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் குடும்பம் கெட்டுப் போகும். அப்படிபட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிபட்ட தலைவரின்…
Read More









