ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய்? காதலி நிர்பந்தமா ?
ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவரது காதலி அவரை பதவியிலிருந்து விலக நிர்பந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உலக அரசியலில் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பை கூட்டியுள்ள நிலையில், ரஷ்யாவிலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி, அந்நாட்டின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு மாஸ்கோவின் அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி பேட்டியளித்துள்ளார். அதில், புடின் பார்கின்சன் நோய் இருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். சமீபத்திய வீடியோ ஒன்றில் நாற்காலியை பிடித்திருக்கும் போது அவரது கால்கள் நடுங்குவது தெரிந்தது. இதனால் அவருக்கு பார்கின்சன் நோய் உள்ளது என பரவலாக பேசப்படுகிறது. அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக கிசுகிசுக்கப்படுவது…
Read More









