உத்தரபிரதேசத்தில் எந்த சாதியினர் யாருக்கு வாக்களித்தனர்?
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ‘இந்தியா’ கூட்டணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தக் கூட்டணி உயர் சாதிகளைத் தவிர எல்லா முக்கிய சமூக வர்க்கங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 75 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகள் ஐந்து இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. 75 இடங்களில் 33 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களையும், அப்னா தளம் (சோனேவால்) ஓரிடத்தையும் வென்றன. மறுபுறம் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. பொது அல்லது முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களான…
Read More








