மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று… – பா.ஜ.க.

மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று… – பா.ஜ.க.

பெரியாரின் நினைவு தினமான இன்று, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதி கொள்வோம்” எனக் கூறப்பட்டிருந்தது. பா.ஜ.கவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு பா.ஜ.கவின் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார், “கூட்டணித் தலைவர்களும் எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில்…

Read More

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், 1941ல் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அந்த சர்ச்சை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும், 60 குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, போப் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ம் ஆண்டு மறைந்தார்.

Read More

நட்புமிகுந்த..பசுமை நிறைந்த..மாசற்ற..மாமாமிசமற்ற கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்

நட்புமிகுந்த..பசுமை நிறைந்த..மாசற்ற..மாமாமிசமற்ற கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் !! இந்தமுறை மரங்கங்ளை வெட்டாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. பட்டாசு வெடித்து உலகை மாசு படுத்தாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மாமிசமில்லா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மெழுகுவர்த்தியால் மாசுபடுத்தகாத கிறிஸ்துமஸ் … உலகை அழிக்காமல் வாழவைக்கும் விதமாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழவும் !! இந்த வீடியோவை பாருங்கள் … பகிருங்கள் .. விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் !!

Read More

மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா, இந்தியாவாக உள்ளது. அவரை போன்ற இரும்பு மனிதர் இல்லையெனில் வன்முறையால் நாடு துண்டாடப்பட்டிருக்கும். இந்தியாவிற்கு மோடியின் தலைமையும், தமிழகத்திற்கு பழனிச்சாமியின் தலைமையும் தேவை. நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு இல்லை. அதிமுக ஆதரிக்கும் எல்லா திட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக.,விற்கு நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என…

Read More

ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியமையானது, பாரிய தவறான விடயம் என ஜனாதிபதி கூறியுள்ளார். அரசியலமைப்பு தெளிவில்லாது காணப்படக்கூடாது எனவும், அதனால் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பயன்படுத்தும் போது அதில் பிரச்சினை எழுந்துள்ளதா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் வலுவான நபர் என்பதனால் தன்னால் பணியாற்ற முடியும் என கூறியுள்ளார். எனினும், ஜனாதிபதியாக வலுவற்ற ஒருவர் இருப்பாராயின், அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஜனாதிபதி பதிலளித்துள்ளார். மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த…

Read More

எப்போதும் சிறுபான்மைக்கு உழைப்போம்: ஸ்டாலின் பேச்சு

எப்போதும் சிறுபான்மைக்கு உழைப்போம்: ஸ்டாலின் பேச்சு

இலங்கை தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும் எனவும், குடியுரிமை சட்டம் பற்றியே தெரியாமல் அதை முதல்வர் ஆதரிக்கிறார் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் வரும் டிச.,23ம் தேதி சென்னையில் பேரணி நடைபெறுகிறது. இதில் திமுக.,வின் கூட்டணி கட்சிகள் மற்றும் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், கொளத்தூரில் கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இல்லாவிட்டலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சி திமுக. இலங்கை தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும். திமுக.,வின் பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு…

Read More

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது  ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார். பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள…

Read More

தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை இஸ்லாமாபாதில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாட்களுக்கு துாக்கில் தொங்க விட வேண்டும் என, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விபரம், தற்போது வெளியாகி உள்ளது. பாக்., முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான முஷாரப்புக்கு, 76, தேச துரோக வழக்கில், இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. மூன்று நீதிபதிகளுமே, முஷாரப் புக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.ஆனால், தண்டனை நிறைவேற்றம் குறித்து, மூன்று பேரும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை அளித்துள்ளனர். இதன் முழு விபரங்கள், நேற்று வெளியாகின. சிறப்பு நீதிமன்ற…

Read More

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை. 1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி…

Read More

மன்மோகன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ

மன்மோகன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில் காங்., முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது. தற்போது பா.ஜ.,அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வரும் முக்கிய கட்சியாக காங்., இருந்து வருகிறது. இந்த நிலையில் 1.08 நிமிடங்களை கொண்ட மன்மோகனின் உரை இடம்பெற்ற வீடியோவை பா.ஜ., இன்று (டிச.,19) வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ., அந்த வீடியோவுடன், “2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில்…

Read More
1 155 156 157 158 159 425