சென்னை இளம்பெண் பலி – கலைந்த கனடா கனவு

சென்னை இளம்பெண் பலி – கலைந்த கனடா கனவு

சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அந்தப் பகுதியில் சாலையில் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மீடியனில் மட்டுமல்லாமல் சாலையின் இருபுறங்களிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சுபஸ்ரீ அந்த வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே…

Read More

சிவபக்தரின் ஜீவசமாதி அறிவிப்பு: சிவகங்கையில் குவிந்த பக்தர்கள்

சிவபக்தரின் ஜீவசமாதி அறிவிப்பு: சிவகங்கையில் குவிந்த பக்தர்கள்

சிவகங்கை அருகே, பாசாங்கரையில் பிறந்தவர், இருளப்பசுவாமி, 77. இவர், 12 வயதில் இருந்தே சிவபக்தர். கடந்த ஆண்டு வரை, திருவண்ணாமலை உட்பட சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றுள்ளார். 1700 கி.மீ., க்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன், ‘செப்., 12 இரவு, 12:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணிக்குள் என் உடலை விட்டு, உயிர் பிரியும். அன்றே எனக்கு ஜீவசமாதி கட்டவேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதன்படி, அவரது, 46 சென்ட் நிலத்தில் எங்கு சமாதி கட்ட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். சில நாட்களாக, வீட்டில் தியானத்தில் இருந்தவர், இன்று காலை (செப்.12) முதல், ஜீவசமாதி அடைய உள்ள இடத்தில், தியானம் துவக்கினார்….

Read More

பிக்பாஸ் 3 லொஸ்லியா: “அப்படியா உன்னை வளர்த்தேன்” – மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன், ஓரமாக நின்ற கவின்

பிக்பாஸ் 3 லொஸ்லியா: “அப்படியா உன்னை வளர்த்தேன்” – மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன், ஓரமாக நின்ற கவின்

பிக்பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன்வந்ததாக காட்சிகள் முன்னோட்டத்தில் இன்று ஒளிப்பரப்பட்டன. பிக்பாஸ் சீசன் 3 கடந்த 79 தினங்களாகத் தினமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் முகேன் குடும்பத்தினர் நேற்று வந்த வேளையில் இன்று லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் வந்தார். பிக்பாஸ் முன்னோட்டத்தில், நா தழும்ப மரியநேசன், ” என்ன சொல்லி வந்த நீ…நான் உன்னை அப்படியா வளர்த்தேன்… கதைக்கக் கூடாது…” என்கிறார். சேரன் மரியநேசனை சமாதானப்படுத்துகிறார். மரியநேசன், “நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. தலை குனிஞ்சு வாழக்கூடாது.எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா ” என்கிறார். லொஸ்லியா அழுகிறார். கவின் ஓரமாக அமைதியாக நிற்கிறார். இவ்வாறாக அந்த முன்னோட்டம் இருக்கிறது. முகேன் குறித்து…

Read More

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை, செப்.13ல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை, செப்.13ல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர் , சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன. இவைகளில், நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த பஞ்சலோக நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ 30 கோடி என தெரிகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் (Art Gallery of South Australia) 2001ம் ஆண்டில், 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை ஓலிவர் போர்ஜ் அன்ட் பெரன்டன் லிங்க் நிறுவனத்திடம் வாங்கியிருந்தது. தமிழகத்திற்கு சொந்தமான…

Read More

கனடா நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நடவடிக்கை

கனடா நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நடவடிக்கை

கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ (வயது 47) இருந்து வருகிறார். அவரது அரசின் மீது கடந்த பிப்ரவரியில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. லாவலின் என்ற பொறியியல் நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு பற்றிய வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்படுத்தி கொள்ள, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலான ஜோடி வில்சனுக்கு, ட்ருடோ மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது. அரசில் உயர்மட்டத்தில் இருந்த பலர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த நிலையில், ட்ருடோ கனடா நாடாளுமன்றத்தினை இன்று கலைத்து உள்ளார். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க உள்ளது. 2வது முறையாக ஆட்சியை…

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் பயணத்தை தவிர்ப்பதன் ஊடாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடனான உடன்படிக்கையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. கலந்துரையாடல் இந்த நிலையில், பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பிலான விசேஷ கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டிருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த கலந்துரையாடலின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read More

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் பால்டனுக்கும். அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது தனது டுவிட்டரில், “நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார்….

Read More

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளார். பல்தேவ் குமார் என்பவர் தனது மனைவி பாவனா, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், பஞ்சாபில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கியுள்ளார். இது குறித்து, மைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பரிகொட் தொகுதி எம்எல்ஏ., ஆக இருந்த பல்தேவ் குமார் கூறுகையில், கடந்த ஆக., 11 இந்தியா வந்தேன். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன. கொல்லப்படுகின்றனர். இரண்டு வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். முழு மனதுடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி…

Read More

சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா

சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா

”அசாமில் மட்டுமல்ல, நாடு முழுவதும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா உறுதிபட கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலமான, அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக குடியிருந்ததாக, 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ‘அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்டு, சட்டவிரோதமாக குடியிருப்பது உறுதியானால் வெளியேற்றப்படுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியிருந்தார். இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, வடகிழக்கு முற்போக்கு கூட்டணியின் கூட்டம், அசாம் மாநிலம், கவுஹாத்தி யில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய, வடகிழக்கு மாநில முதல்வர்கள் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்,…

Read More

பாக்., முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம்

பாக்., முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம்

பாக்,, சார்பில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பாக்.,ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாக்.,ன் நிதி பற்றாக்குறையானது 2018-19 ம் நிதியாண்டில் உச்சத்திற்கு சென்றுள்ளது. பாக்.,ன் பொருளாதார சூழலை கணக்கில் கொண்டு சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் பாக்.,க்கு நிதியுதவி அளித்து வருகின்றன. பாக்.,ல் எண்ணெய், எரிவாயு, மின்சாரம் என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக பாக்., சார்பில் செப்.,4 முதல் 8 ம் தேதி வரை அஜர்பய்ஜனில் முதலீட்டாளர்கள்…

Read More
1 172 173 174 175 176 425