ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவிற்க பல அமெரிக்கர்களின் உயிர்களை விலையாக கொண்டுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்காவை தாலிபன்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபன் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வீரர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கம் விதமாக தாலிபன்கள் அறிக்கை ஒன்றைய வெளியிட்டுள்ளனர். அதில், “ஆப்கானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எங்களின் தாக்குதல் தொடரும். டிரம்பின் இந்த செயல் அமெரிக்காவில் பல இழப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அமைதிக்கு எதிரான நிலைப்பாடு இதன்…

Read More

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பி அமைச்சர் பதவியில் இருந்து விலகல் – பிரெக்ஸிட் சர்ச்சை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பி அமைச்சர் பதவியில் இருந்து விலகல் – பிரெக்ஸிட் சர்ச்சை

குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி தமது அமைச்சர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன். வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யுமான ஜோ தமது பணியில் தீர்க்க முடியாத நெருக்கடி இருந்துவந்ததாக குறிப்பிட்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டுமா, விட்டு விலகவேண்டுமா என்பதற்காக 2016ல் நடத்தப்பட்ட பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்கவேண்டும் என்று வாக்களித்தார் ஜோ. அதே நேரம், அவரது சகோதரர் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாகப் பிரசாரத்தை முன்னின்று நடத்தினார். பிரதமர் தெரீசா மே தயாரித்த வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…

Read More

திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார்

திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த அறை, பொருளாதார குற்றவாளிகள் அடைக்கப்படும் பகுதியில் உள்ளது. ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று (செப்.,5) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும் , ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஐஎன்எக்ஸ்…

Read More

செப்டம்பர் 28ம் திகதி உதயன்-2019 பல்சுவைக் கலைவிழா

செப்டம்பர் 28ம் திகதி  உதயன்-2019 பல்சுவைக் கலைவிழா

எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ள உதயன்-2019 பல்சுவைக் கலைவிழாவில் மீண்டும் மலேசியாப் பாடகர் ரவாங் ராஜா. சில வருடங்களுக்கு முன்னர் உதயன் பல்சுவைக் கலைவிழாவிற்கு அழைக்கப்பட்டு அங்;கு தமிழ் மற்றும் சீன மொழிப் பாடல்களைப் பாடிய ரவாங் ராஜா மீண்டும் எமது மேடையில்.. செப்டம்பர் 28ம் திகதி சனிக்கிழமை..

Read More

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது. தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ”தனிப்பட்ட சுதந்திரம்” என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது. பிரா அணியாத இயக்கம் ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும்,…

Read More

பிரெக்ஸிட் ஒப்பந்தம் – போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் – போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பொதுஅவையில் நடந்த வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார். தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்…

Read More

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்

ஒடிசாவில் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட அபராதங்கள், நாடு முழுவதும், 1ம் தேதி(செப்.,1) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியது, ஆட்டோவில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லாததற்காக, ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காற்று மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வண்டிக்கு பர்மிட் இல்லாததற்காக ரூ.10 ஆயிரம், பதிவெண் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், இன்சுரன்ஸ் புதுப்பிக்காததற்காக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47,500…

Read More

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் மனைவி கொடுத்த புகாரில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பிற பெண்களோடு தொடர்பு, உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஹாசின் ஜஹான் வைத்ததை அடுத்து ஷமி மீது 2018 மார்ச் மாதம் வழக்குத் தொடரப்பட்டது. தற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக்கொள்ளலாம். இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது….

Read More

காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்

காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்

காஷ்மீரில் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை எடுப்பது கடினம் என அந்த நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனால்…

Read More

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்ட நிலையில் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்கிறார். முன்னதாக, டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நியமன ஆணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைவர் பதவியை கைப்பற்ற, அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பா.ஜ.,வை, வடக்கு, தெற்கு என, இரு மண்டலமாக பிரித்து, புதிய…

Read More
1 173 174 175 176 177 425