பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது. கடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி…

Read More

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்பர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது…

Read More

பார்வையாளர்கள் அதிகரிப்பு: சுதந்திர தேவி சிலையுடன் படேல் சிலையை மோடி ஒப்பீடு

பார்வையாளர்கள் அதிகரிப்பு: சுதந்திர தேவி சிலையுடன் படேல் சிலையை மோடி ஒப்பீடு

குஜராத் மாநிலத்தில் உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை (182 மீட்டர் உயரம்) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் இதுபற்றி குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:- படேல் சிலை திறந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 11 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 23 லட்சம் சுற்றுலா பயணிகள் இதுவரை இச்சிலையை பார்த்துள்ளனர். அதாவது, சராசரியாக ஒரு நாளுக்கு 8 ஆயிரத்து 500 பேர் பார்த்து வருகிறார்கள். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 133 ஆண்டுகள் பழமையான சுதந்திர தேவி சிலையை ஒரு நாளுக்கு சராசரியாக 10…

Read More

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்: ஜெய்சங்கர் உறுதி

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்: ஜெய்சங்கர் உறுதி

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது. அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக்…

Read More

இலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன்

இலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன்

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் இணைந்துக் கொண்டு கருத்து தெரித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களுக்கு தமிழ் நாட்டு உறவுகள் தமது ஆதரவை தெரிவித்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி, தமிழ் மக்களின் இருப்பையும்,…

Read More

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது.     இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். “Howdy Modi” நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு…

Read More

ஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி

ஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி

ஹிந்தி திணிப்பு என கமல், ஸ்டாலின் ஊளையிட்டு வருகின்றனர் என பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சத்துள்ளார்.     ஹிந்தி தினமான செப்., 14ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஹிந்தி தான என்று, கருத்து பதிவிட்டிருந்தார்.   அமித்ஷாவின் இந்த கருத்து பலதரப்பில் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மைய தலைவர் கமல் உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது…

Read More

47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை

47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது. ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது. இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்….

Read More

பாக்., உலக மேப்பில் இருக்காது: ஆர்.எஸ்.எஸ்.,

பாக்., உலக மேப்பில் இருக்காது: ஆர்.எஸ்.எஸ்.,

‘வரும் காலங்களில் பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது’ என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார். டில்லி என்.டி.எம்.சி., மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திரேஷ் குமார் பேசியதாவது: 1947ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லை. இனி வரும் காலங்களில் அது நடக்கும் என நம்புகிறேன். காந்தி ஜெயந்தியையும், ஹிந்தி திவாசையும், விரைவில் லாகூரில் கொண்டாடுவோம். பிரிவினைக்கு பின் 1971ம் ஆண்டு பாகிஸ்தான் மேலும் பிரிக்கப்பட்டது. ‘பிரிவினைவாத இயக்கங்களால்’ பாகிஸ்தான் விரைவில் நொறுங்கிவிடும். தற்போது 5-6 துண்டுகளாக பிரியும் விளிம்பில் அந்நாடு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து பஷ்டூனிஸ்தான், பலுசிஸ்தான், சிந்து பிரிந்து செல்ல விரும்புகிறது. பாக்.,…

Read More

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வு

விடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வு

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காக பெரும் கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களின் நிலை தற்போது எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களில் சிலரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது. இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்தபோது, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த…

Read More
1 171 172 173 174 175 425