பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதியருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின.  சில வீடுகள் இடிந்து விழுந்தன.  அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.  பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன.  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர்.  ஜீலம் கால்வாய் சேதமடைந்து உள்ளது.  அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இந்நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.  300…

Read More

இந்தியாவின் தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவின் தந்தை மோடி என புகழாரம் சூட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

இது குறித்து பிரதமர் கூறுகையில் ஹூஸ்டன் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அதிபர் டிரம்ப் எனது நண்பர் மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த நண்பர் எனவும் கூறினார். தொடர்ந்த பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கொள்கையின் மீது மோடிக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கும் மோடிக்கும் இடையேயான கெமிஸ்டிரி ஒத்து போகிறது. இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளது. பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் இம்ரான் கானும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என நம்புகிறேன். சந்திப்பின் மூலம் நல்ல விசயங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பாக்.,கை மோடி கவனித்துக்கொள்வார் மேலும் அல்குவைதாவிற்கு பயிற்சி அளித்ததாக ஒப்புக்கொண்ட பாக்., பிரதமர் இம்ரான்கானின் அறிக்கையை…

Read More

இலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம் – முல்லைத் தீவில் பதற்றம்

இலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம் – முல்லைத் தீவில் பதற்றம்

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விஹாரை வளாகத்தில் இறுதிக் கிரியைகளை செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட உத்தரவை மீறி, நீராவியடி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கொழும்பு தம்மாலங்காரகீர்த்தி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடத்தப்பட்டன. பௌத்த பிக்குகளின் தீர்மானத்திற்கு அமைய விஹாரை வளாகத்தில் இந்த இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கிறார். முல்லைத்தீவு நீராவியடி குருகந்த ரஜமஹா பௌத்த விஹாரையின் விஹாராதிபதி கொழும்பு தம்மாலங்காரகீர்த்தி தேரர், புற்று நோய் காரணமாக நேற்று முன்தினம் (21) உயிரிழந்தார். அவரது உடலை விஹாரையில் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை விஹாரை நிர்வாகத்தினர் முன்னெடுத்தனர். எனினும், நீராவியடி…

Read More

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஷா தின்’ எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர். ஷா தின்னில் காவல் துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல் துறை மீது…

Read More

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில், கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சின்மயானந்த் உடல்நிலை மோசமடைந்தது. சிறையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆஞ்சியோகிராம் சோதனைக்காக, லக்னோவுக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சின்மயானந்த் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய நோய் மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, கோர்ட்டில் சிறப்பு…

Read More

ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி

ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் இனவெறி

தனியார் பள்ளி கொண்டாட்டம் ஒன்றில் தோலில் பழுப்பு நிறத்தில் வண்ணங்களைப் பூசி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிகழ்வும் இப்போது நடந்தது இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. அந்த சமயத்தில் ஜஸ்டின் கல்வி நிலையம் ஒன்றின் பயிற்றுநராக இருந்தார். இந்த புகைப்படமானது’டைம்’ இதழில் வெளியானது. இதனை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அவர், “அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன்” என்றார். தேசிய கனடிய முஸ்லிம் மன்றம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குநர் முஸ்தஃபா ஃபரூக், “பிரதமரின் இந்த செயல் கவலை தருகிறது….

Read More

அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – பிரதமர் மோடி

அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – பிரதமர் மோடி

60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் உச்ச நிதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்  17  ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதற்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால் மீண்டும் வழக்கு முதலில் இருந்தே விசாரிக்க வேண்டி இருக்கும். முன்னதாக அயோத்தி வழக்கை சமரச குழு மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சமரச குழுவின்…

Read More

சிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு

சிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், அக்.,3 வரை நீட்டிக்கப்பட்டது. ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், கோர்ட் உத்தரவுப்படி, 14 நாள் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைத்தனர். அவரது நீதிமன்ற காவல் இன்று(செப்., 19) முடிவடைந்தது. இதனையடுத்து, டில்லி சிபிஐ கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்., 3 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Read More

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்

இலங்கையில் வரும்  நவம்பர் 16 ஆம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெறும்

இலங்கையில் வரும்  நவம்பர் 16 ஆம் தேதி  அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி முதல்  தொடங்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான எஸ்எல்பிபி கட்சி கோத்தபயே ராஜபக்சே தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார். இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்எல்எப்பி ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

Read More

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில்,தமிழகத்தைச் சேர்ந்த இமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஜனாதிபதி பதவி உயர்வு தந்து ஒப்புதல் அளித்தார்.

Read More
1 170 171 172 173 174 425