மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”

மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற  கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரி மேற்கண்டவாறு ஒரு செய்தியை பிரசுரித்துள்ளது. வழமையாக தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்படுத்தப்படும் அரசியல் சார்ந்த பின்னடைவுகள் போன்றவற்றை தகுந்த முறையில் சுட்டிக்காட்டு மேற்படி “வலம்புரி” பத்திரிகை இந்த செய்தியின் மூலம் சரியான ஒரு விடயத்தை எமது மக்களுக்கு சொல்ல முனைகின்றது என்ற எண்ணத்தோடு இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம்.- ஆசிரிய பீடம். மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. ஆமாம்!புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான…

Read More

தேயிலை உற்பத்தி அழிவு கண்டால் இலங்கையின் பொருளாதாரமும் அழிந்துவிடும் என்கிறார் முத்தையா முரளிதரன்

தேயிலை உற்பத்தி அழிவு கண்டால் இலங்கையின் பொருளாதாரமும் அழிந்துவிடும் என்கிறார் முத்தையா முரளிதரன்

பெருந்தோட்ட பயிர் அழிவு கண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் .தெரிவித்துள்ளார்.அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் முன் னேற்றத்திற்காக பொது வான பணிகளை முன்னெடுக்க கடந்த இரண்டாயிரமாம் ஆண்டில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.இதுவரை காலமும் எத்தனையோ பொது அமைப்புகள் மலையக மக்களுக்காக சேவையாற்ற முன்வந்திருந்த போதிலும் அவர்கள் வழங்கும் உதவிகள் மக்களுக்கு…

Read More

தமிழருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை எவறாலும் அழிக்க முடியாது என்கிறது சுதந்திரக் கட்சி

தமிழருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை எவறாலும் அழிக்க முடியாது என்கிறது சுதந்திரக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ அன்றி அவர்களோடு குலாவித்திரியும் ரணில் விக்கிரமசிங்காவினாலோ, வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்து விட முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் தலைவர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படைவாத உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான பந்தத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது.அதேநேரம் நாட்டுக்கு பொருத்தமான அரசியல் யாப்பு ஒன்றுக்கு தாங்கள் ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம் சிறிலங்கா சுதந்திர கட்சியில் எந்த…

Read More

மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை என்கிறார் மகிந்த

மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை என்கிறார் மகிந்த

மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை.தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆனமடுவ பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியும். ஆனால் அந்த விடயத்தில் அரசாங்கம் எந்த அக்கறையும் இல்லாது இருப்பதாக மகிந்தராஜபக்சா சுட்டிக்காட்டியுள்ளார். கடன் பெற்றதாக எம்மீது குற்றம் சமத்தப்படுகின்ற போதும், அந்த கடன்கள் பாரிய வேலைத்திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் பெற்றக் கடன்கள் அனைத்தும் சுயலாபத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதும், அரசாங்கம் அதனைக் குறைக்கவில்லை.ஆனால் தாம்…

Read More

ஜனாதிபதி மைத்திரி பதவியேற்பின் நான்காண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரித் ஓதும் வைபவம் இடம்பெற்றது

ஜனாதிபதி மைத்திரி பதவியேற்பின் நான்காண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரித் ஓதும் வைபவம் இடம்பெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு கடந்த செவ்வாய் அன்று இரவு முதல் புதன் அதிகாலை வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஹ_ணுபிட்டிய கங்கா ராம விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜிதேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பங்கு பற்றுதலுடன் இந்த பிரித்பாராயண நிகழ்வு இடம் பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன இங்கு இடம் பெற்ற சமய உரையை செவிமடுத்தார். புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேநேரம் புதன் காலை மகாசங்கத்தினருக்கான அன்னதான நிகழ் வொன்றும் இடம்பெற்றது. சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ…

Read More

சுமந்திரன் எம்பியை எச்சரிக்கை செய்த இலங்கையின் உயர் நீதி மன்றம்

சுமந்திரன் எம்பியை எச்சரிக்கை செய்த  இலங்கையின் உயர் நீதி மன்றம்

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம் தானே என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் கொழும்பு உயர் நீதி மன்றம் நேற்று கேள்வி எழுப்பி, எச்சரிக்கையும் செய்தது யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்ற அமர்வு இந்தக் கேள்வியை எழுப்பியது. “மேன்முறையீட்டு மனுதாரர் என்னுடன் இல்லை. அவர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர். அதனால்தான் இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில்…

Read More

தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது

தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது

மாகாண நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் அநியாயங்கள் இடம்பெற்றதாகவும்,  அவ்வாறான அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது எனவும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, இன்று வியாழக்கிழமை ஹிஸ்புல்லா கொழும்பில் சந்தித்தார். இதன்போது எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுக்கப் போவதாக, சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஹிஸ்புல்லாவிடம் இந்த சந்திப்பின்போது…

Read More

பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது

பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார்.  அவரது மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் சென்றனர்.  ஜனவரி 10ந்தேதி வரை 3 வாரங்கள் அங்கு தங்கி ஓய்வு எடுத்து கொள்வார் என தகவல் வெளியானது.  அமெரிக்காவில் தங்கும் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது ஓய்வை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.  அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள். பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.  மிக்க சந்தோஷம்.  அவர்களை சந்தோசப்படுத்துவதே முக்கியம்.  அவர்களின் சந்தோசமே நமது சந்தோசம்…

Read More

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த மசோதா பார்லிமென்ட் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமநிலைக்கான இளைஞர் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Read More

‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’: மன்மோகன் சிங் பற்றிய சினிமாவுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’: மன்மோகன் சிங் பற்றிய சினிமாவுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் சினிமாவாக வர உள்ளது. இதில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிகர் அனுபம்கெர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் பதவியை அவமதிப்பது போல் உள்ளதால், ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் மற்றும் டிரைலருக்கு தடை கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முரளிதர், சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘படத்திற்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை. தனிப்பட்ட…

Read More
1 215 216 217 218 219 425