மாரி 2 – சினிமா விமர்சனம்

மாரி 2 – சினிமா விமர்சனம்

போதை பொருள் கடத்தல் கும்பலும், அதற்கு எதிரான கதாநாயகனும். படம் “மாரி–2” கதாநாயகன் தனுஷ், கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் பாலாஜி மோகன் இயக்கியுள்ள மாரி–2 படத்தின் விமர்சனம். கதையின் கரு: தனுஷ் ஒரு ரவுடி என்றாலும், போதை பொருளை கடத்த மறுக்கிறார். அவரை ஒருதலையாக காதலிக்கிறார், சாய்பல்லவி. அவருடைய அக்காவின் மானத்தை தனுஷ் காப்பாற்றினார் என்பதால், அவர் மீது சாய்பல்லவி கொண்ட காதல் இன்னும் தீவிரமாகிறது. போதை பொருள் கடத்தும் கும்பல், தனுசை எப்படியாவது போதை பொருள் கடத்த வைப்பது என்று சதி செய்கிறது. அந்த கும்பலின் தலைவன் டோவினோ தாமஸ் விரித்த வலையில், தனுசின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா சிக்குகிறார். அவரை வைத்தே தனுசை…

Read More

நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சு

நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சு

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார். கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி)…

Read More

சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து, கேரளாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது; 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற, ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பக்தர்கள், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பிந்து,…

Read More

இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பான அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஒன்பது நாட்கள் கடந்த நிலையில், நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர், அமைச்சர்களுக்கான கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றினை தெரியப்படுத்தும், விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி, 29 பேரைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அவரவருக்குரிய அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வரை வெளியிடப்படவில்லை. அமைச்சர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியே வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 20ஆம்…

Read More

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

திருவாரூர் இடைத்தேர்தல் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் தேர்தலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், அவர் என்னென்ன நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன? திருவாரூர் திமுகவின் கோட்டை. 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு தேர்தல் வரை திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதி. இந்திரா காந்தி மரணம், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1984-ம் ஆண்டு தேர்தலில்கூட இங்கே திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல 1991-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அலையிலும்கூட திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக…

Read More

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. நாட்டு மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பா.ஜ.க.விற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே…

Read More

சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்”

சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்”

சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்கவேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நினைப்பதாகக் கருதப்பட்டது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாள்களுக்கு…

Read More

எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா?

எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா?

இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படத்தில், `இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன` என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், இம்மாதிரி உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுள்களின் சிலையை நாம் கண்டறியலாம்; இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்தது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் போல காட்சியளிக்கிறது. அங்கு ஆள் ஒருவரும் காணப்படுகிறார். மேலும் சில சிலைகளின் பின்புறம் தெரிகிறது. இந்த புகைப்படத்தை கூகுளில் ‘ரிவர்ஸ் இமேஜ் தேடல்’ ஆய்வு…

Read More

மே.வங்கத்தில் பா.ஜ., யாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி

மே.வங்கத்தில் பா.ஜ., யாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி

லோக்சபா தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 3 இடங்களில் யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. இதை கட்சி தலைவர் அமித் ஷா துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், யாத்திரைக்கு அனுமதி வழங்க மாநில அரசு அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதி வழங்கியதுடன், பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். பொது மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்தக்கூடாது. அமைதியாக யாத்திரை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாததை அரசு உறுதி செய்வதுடன், போலீசார் 12 மணி நேரத்திற்கு முன்பே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இது…

Read More

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளராக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அவர் கடந்த நவம்பர் மாதம் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த…

Read More
1 217 218 219 220 221 425