முல்லைத்தீவு மாந்தைப் பகுதியில் 60 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் நேரில் கையளித்துள்ளார். இந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தக் காணிகள் கையளிப்பு தொடர்பாக கருத்துக்களை…
Read More








