325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்

325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்

காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டவும் இதன் வழியாக கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுதோற்றத்தை பார்வையிடும் வகையில்கட்டவும் திட்டமிட்டுள்ளது. தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்,இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

Read More

பா.ஜ., ஆபத்தான கட்சியா? : அமைச்சர் ஜெயகுமார் பதில்

பா.ஜ., ஆபத்தான கட்சியா? : அமைச்சர் ஜெயகுமார் பதில்

”மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாங்கள், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்,” என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.சென்னை மாநராட்சியில், இயற்கை பேரிடர் காலங்களில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, 4.86 கோடி மதிப்பீட்டில், 336 நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது.இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், பேரிடர் காலங்களில், சாலையில் விழும் மரங்களை, உடனுக்குடன் அகற்ற, 171 மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற, அதிக திறன் கொண்ட, 17 மோட்டர் பம்புகள் உள்ளன.தற்போது கூடுதலாக, 200 மரம்…

Read More

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

‘பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும், அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, புதிய பிரதமராகவும் அவர் அறிவித்தார்.இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நவ., 5ல் நடப்பதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத் தொடரை, நவ., 14ம் தேதிக்கு, சிறிசேன ஒத்தி வைத்தார். ஆனால், தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் கூறி வந்தார்.இந்நிலையில், பார்லிமென்டை கலைப்பதாகவும், அடுத்தாண்டு, ஜனவரி, 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், சிறிசேன, சமீபத்தில்…

Read More

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார் கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக…

Read More

மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரோடு சேர்த்து நடத்தப்பட்ட மகளிர் உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக தனியாக மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படுகிறது. கயானா நகரில் இன்று தொடங்கும் போட்டியில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய…

Read More

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்பட்ட இவர் உருவாக்கிய, ஹல்க், ஸ்பைடர் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில்  மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.  இளம் வாசகர்களை கவரும் வகையில் ஸ்டேன் லீயின் கதைகள் இருந்தது.

Read More

‘அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்’ பெண் பத்திரிகையாளர் சாட்சியம்

‘அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்’ பெண் பத்திரிகையாளர் சாட்சியம்

‘ஏஷியன் ஏஜ்’ உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய, எம்.ஜே.அக்பர், 67, பா.ஜ.,வில் இணைந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட, பல பெண்கள், அவர் மீது புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அக்பர், பிரியா ரமணி மீது, அவதுாறு வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சண்டே கார்டியன்’ பத்திரிகையில், அக்பருடன் பணியாற்றிய, ஜோயிதா பாசு நேரில்ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:நான், அக்பருடன், 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மிகச் சிறந்த பத்திரிகையாளர், சிறந்தஆசிரியர் என்பதுடன், சிறந்த பண்பாளராகவும் அவர்…

Read More

கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை உயர்வு

கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை உயர்வு

கலிஃபோர்னியாவை மிரட்டி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயினால் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானர்வர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மோசமான காட்டுத்தீயாக கருதப்படும் 1933ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கிரிஃபித் பூங்காவில் நிகழ்ந்த காட்டுத்தீயிக்கு சமமான நிலையை இது அடைந்துள்ளது. அதேசமயத்தில், கலிஃபோர்னியாவின் தென்பகுதியிலுள்ள வூல்சி பகுதியில் ஏற்பட்ட தீயில் கடற்கரையோர உல்லாச விடுதிகளில் பரவியதில் தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில்…

Read More

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.  நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்த…

Read More

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலும் இந்து அல்லாத பெண் ஒருவர் நுழைந்தது சர்ச்சை

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலும் இந்து அல்லாத பெண் ஒருவர் நுழைந்தது சர்ச்சை

பத்மநாபசுவாமி கோவிலின் உள்ளே இந்து அல்லாத பிற மதத்தினர் செல்ல தடை உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அல்பாசி உற்சவ விழா நவ., 5ம் தேதி துவங்கியது. நேற்று (நவ.,11ம் தேதி) விழா பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது இந்து அல்லாத பெண் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து விட்டதாக தகவல் வெளியானது. இதைக் கேள்விபட்ட தலைமை தந்திரி தாரநல்லூர் நம்பூதிரி பூஜைகளை உடனே நிறுத்த உத்தரவிட்டார். கோவில் கதவுகள் மூடப்பட்டு கோவிலை புனிதப்படுத்தும், சுத்திகிரி பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை நடக்க இருந்த,’எழுநெல்லது’ பூஜைகளும் நிறுத்தப்பட்டன. இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறுகையில், ‘ கோவிலுக்கு வெளியே, ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது….

Read More
1 224 225 226 227 228 425