ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதல்
போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி,, பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பேருந்து, அப்போது சாடா பிராந்தியத்திலுள்ள தயான் சந்தை வழியாக பயணித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதிகள் நடத்தும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. ஏமன் அரசாங்க ஆதரவுடன், அந்நாட்டிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சௌதி தலைமையிலான கூட்டணி இந்த தாக்குதல் ‘சட்டப்படியானதுதான்’ என்று தெரிவித்துள்ளது. தாங்கள் எப்போதுமே பொது…
Read More









