முல்லைத்தீவில் தமிழ் பேசும் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் கடந்த ஞாயிறு அன்று இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை அமைத்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். திங்கட்கிழமையன்று முல்லைத்தீவுக்குச் சென்ற கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மீனவர்களுடன் பேச்சு நடத்தி, சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடியை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார். இதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை இடைநிறுத்தினர். இந்த நிலையில் , நாயாறு பகுதியில் உள்ள…
Read More









