இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலாவின் சீர்திருத்த அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் எதுவுமே செய்யவில்லை

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலாவின் சீர்திருத்த அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் எதுவுமே செய்யவில்லை

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீர்திருத்த அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும், நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், பொறுப்புக்கூறல், மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், சமூகங்கள் மத்தியில் பிணைப்பை அதிகரிக்க ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை. மாறாக இலங்கையில் உள்ள இரு சமூகங்கள் மத்தியிலான, அரசியல் துருவமயப்படுத்தல் அதிகரித்துள்ளது. இவ்வாறு இலங்கையில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி அவர்களின் கண்களில் தென்படவேயில்லை என்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ்…

Read More

ஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை, தமிழர்களுக்கு பாதிப்பையே தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி

ஐ. நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை,  தமிழர்களுக்கு பாதிப்பையே  தரும் என்கிறார் சுமந்திரன் எம். பி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரு சுமந்திரன் தொடந்து கருத்துக் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம். வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம். அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவுடன் இணைந்து, தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள், தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடனும் பேச்சு நடத்துவோம். இலங்கை தொடர்பாக, ஐ.நா. மனித…

Read More

14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது

14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் மேலும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 86 தனிநபர்கள் பட்டியலுடன், இந்த 14 பேரும் இணைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மேலதிகமாக தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு- நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாறன் கமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல். அன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் அல்லது பரதன் சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது…

Read More

நீதிபதிகள் விடுக்கும் உத்தரவுகள் நியாமற்ற இனவாத எதிர்ப்புக்களிடம் தோற்றுப் போகின்றன!!

நீதிபதிகள் விடுக்கும் உத்தரவுகள் நியாமற்ற இனவாத எதிர்ப்புக்களிடம் தோற்றுப் போகின்றன!!

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, முழு இலங்கைத் தீவிலுமே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு மேலாக இராணுவம் மற்றும் போலீஸ் படைகளும் தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லுவதற்கு எப்போதும் தயங்குவதில்லை.. இவ்வாறு கடந்த காலங்களில் ஆயிரக்கணக்காக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படடபோது தமிழ்ப் பிரதேசங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய தமிழ் பேசும் கனவான்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பொலிஸாரையோ அன்றி இராணுவத்தினரையோ அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று கைது செய்துவருமாறு பொலிசாருக்கு பணிப்புரைகள் வழங்கவது வழக்கம். ஆனால் அந்த உத்தரவுகள் எதுவுமே இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்புத கண்கூடான…

Read More

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு ‘சர்கார்’

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு ‘சர்கார்’

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படத்துக்கு ‘சர்கார்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்காமல், இதுவரை…

Read More

காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) எனும் அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் வெளியிட்டுள்ள படம் இளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண்பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் ITJP குறிப்பிட்டுள்ளது. இவர்கள் 18.05.2009ஆம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது…

Read More

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு

பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மந்திரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டு யோகா செய்தார்கள். மும்பை பாந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேசுகையில், நேர்மறையான எண்ணங்களுக்கு யோகா பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் வாழ்க்கை…

Read More

மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்காமல், சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் அருகில் உள்ள மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஏராளமானோர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கேயே தங்கி விடுகின்றனர். இதை தடுக்க, அதிபர், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, சமீபத்தில் கடுமையான விதிகளை அமல்படுத்தியது. அதன்படி, அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவோர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேசமயம், அவர்களுடன் வந்த, அவர்களது குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு, எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும்…

Read More

22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் – பிரபு

22 வருடங்களுக்குப் பிறகு இணையும் மோகன்லால் – பிரபு

பிரியதர்ஷன் நடிப்பில் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘காலபனி’. தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸான இந்தப் படத்தில், மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி, வினீத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார். இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – பிரபு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், 22 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்த முறையும் பிரியதர்ஷனே இவர்களை இயக்கப் போகிறார். பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி…

Read More

இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

இங்கிலாந்து: ஒருநாள் போட்டியில் மெகா சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த 3-வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இங்கிலாந்து தனக்கு தானே அந்த சாதனையை முறியடித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேஷன் ராய், பேர்ட்ஸ்டோவ் அதிரடி…

Read More
1 253 254 255 256 257 425