கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்
உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ”நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது” என்று தெரிவித்திருந்தார். ”இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார். கனடா…
Read More









