சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசிதரூருக்கு முன்ஜாமீன் ஒத்திவைப்பு: கைது செய்யப்பட வாய்ப்பு?

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசிதரூருக்கு முன்ஜாமீன் ஒத்திவைப்பு: கைது செய்யப்பட வாய்ப்பு?

புதுடெல்லி பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று காலை சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவரும் காங்கிரஸ் தலைவருமான சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே மாதம் டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் சசிதரூருக்கு பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம்…

Read More

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி

மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும் ஆல்லைன் இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அதில் பிரதமர் மோடியிடம், எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பிரதமர் மோடி பதில் அளித்ததாவது: ”நான் எங்கு சென்றாலும் காரின் இருக்கையிலேயே அமர்ந்திருக்க முடியாது. சாலையில், தெருக்களில் நிற்கும் மக்களைப் பார்க்க வேண்டியது இருக்கும், அவர்களின் வாழ்த்துகளைப் பெற வேண்டியது இருக்கும். அவர்களைப் பார்த்து நான் பரவசத்தில் பேச வேண்டியது இருக்கும். நான் மிகப்பெரிய அரசனும் இல்லை…

Read More

தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் கருத்து

தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் கருத்து

இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.” என்று தெரிவித்தார். “அண்மையில் யாழில்…

Read More

டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்

டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என இரு கோணங்களிலும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகு தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் எந்தவித இறுதி முடிவுக்கும் வரவில்லை என்றும் குற்றவியல் பிரிவு போலீசார் கூறுகின்றனர். 11 சடலங்களின் உடற்கூறாய்வு மெளலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்தானம் செய்ய ஒத்துக்கொண்டிருந்தாலும், 11 பேரில் ஆறு பேரில் கண்களை மட்டுமே தானமாக பெற முடிந்தது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த…

Read More

ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனுக்கு முழுக்கு: சீக்கியர்கள் முடிவு

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் இறந்ததை தொடர்ந்து, அங்கு வசிக்கும் சீக்கியர்கள், இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆப்கனில் கடந்த 1990ம் ஆண்டுகளுக்கு முன் 250,000 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் வசித்து வந்தனர். ஆனால், தற்போது, 300 சீக்கிய குடும்பத்தினர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க அதிபரை சந்திக்க சென்ற போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சீக்கியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சீக்கியர்களில் பலர் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆனால், சிலர், ஆப்கன் தான் சொந்த நாடு எனக்கூறி, அங்கேயே தங்க முடிவு செய்துள்ளனர். சீக்கிய அமைப்பின் சிலர்,…

Read More

ரோஹித், தவான் விளாசல்; இந்தியா அசத்தல் வெற்றி

ரோஹித், தவான் விளாசல்; இந்தியா அசத்தல் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‛டி-20′ கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரோஹித், தவான் அரைசதம் கடந்து கைகொடுத்தனர். அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, டப்ளின் நகரில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஸ்டூவர்ட் தாம்ப்சன் வீசிய 3வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கின் வீசிய 4வது ஓவரில், 2 பவுண்டரி விளாசினார் ரோகித். கெவின்…

Read More

‘கழுகு 2’ படத்தின் ஷூட்டிங்: மூணாறில் தொடங்கியது!

‘கழுகு 2’ படத்தின் ஷூட்டிங்: மூணாறில் தொடங்கியது!

சத்யசிவா இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘கழுகு’. கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவி நடித்தார். கருணாஸ், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். காமெடி த்ரில்லர் படமான இதற்கு சத்யா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 6 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் மூணாறில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தை, சிங்காரவேலன் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது….

Read More

மனைவி வேண்டாம்: கணவர்கள் பூஜை

மனைவி வேண்டாம்: கணவர்கள் பூஜை

மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டனர். வட மாநிலங்களில் வட் பூர்ணிமா என்ற பண்டிகை மிகவும் பிரபலம். அன்றைய நாளில், திருமணமான பெண்கள் விரதமிருந்து, தங்களது கணவர்கள் நலமுடன் வாழவும், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டி கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள். நேற்று (ஜூன் 27) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள கோயில் ஒன்றில், கணவருக்காக பெண்கள் விரதமிருந்து மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினர். மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அதே மரத்தை எதிர்திசையில்…

Read More

பயங்கரவாதிகளுக்கு புகலிடம்: பாக்.,கிற்கு ஹாலே எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு புகலிடம்: பாக்.,கிற்கு ஹாலே எச்சரிக்கை

பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக பாகிஸ்தான் மாறுவதை பொறுத்து கொள்ள முடியாது. இது குறித்து ஏற்கனவே அந்நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.,விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள நிக்கி ஹாலே, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்தும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பயங்கரவாதிகள் உற்பத்தி செய்யப்படுவதை நாங்கள் சும்மா கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். பயங்கரவாதிகள் புகலிடமாக மாறுவதை பொறுத்து கொள்ள மாட்டோம் என பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேச தலைமை பதவியை வகிக்கலாம். இவ்வாறு…

Read More

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பெரு அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இதில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பாவ்லோ குயரேரோ உதவியுடன் பந்தை பெற்ற ஆன்ட்ரே காரில்லோ, பாக்ஸின் வலது புறத்தில் இருந்து கோல்கம்பத்தின் இடது புறத்தில் பந்தை திணிக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில்…

Read More
1 251 252 253 254 255 425