ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாக, நிபுணர்கள் கூறியதை அடுத்து, அங்கிருந்த மூன்று கழிப்பறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. ‘இதன் மூலம், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என, அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 14 ஆண்டு களாக, இங்கு, பா.ஜ., தான் ஆட்சி நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ., எதிர்க்கட்சியான, காங்கிரஸ் ஆகியவை, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள், வாஸ்து நிபுணர்களை…

Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் றட்ணஜீவன் கூல் தொடர்பில் ஆராயும்படி மல்லாகம் நீதவான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் ஒரு கட்சிசார்பாக செயற்படுவதாகவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் நீதிமன்றமும் பொலிஸாரும் உடன்பாட்டுடன் இயங்குகின்றனர் என்ற பொருள்பட பத்திரிகையில் கட்டுரை எழுதியமை தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை பிறப்பித்துள்ளது இந்த றட்ணஜீவன் கூல் என்பவர் கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக வருவதற்கும் முயன்றவர் என்பதும் தற்போது எம்பி சுமந்திரன் அவர்களின் சிபார்சின் பேரிலேயே இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார் என்பதும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் பெறப்பட்டவையாகும். இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையானது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் தனது தேர் தல் பரப்புரைக்…

Read More

வட்டுக்கோட்டை பகுதியில் வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில்  வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான  ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றில் இருந்தே குறித்த பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்ப ட்டுள்ளன. இந்நிலையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை குறித்த வயற் காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்று நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.இதனையடுத்து குறித்த ஆயுதங்கள் காணப்படுவது தொடர்பாக குறித்த வயற்காணிக் குரியவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு…

Read More

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினர் அபகரிப்பதில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட காணி உரிமையாளர் அதனை எதிர்த்துள்ளார். எனவே அந்த உரிமையாளரை, கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் மனித வுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த வாரம் முறைப் பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை வீதி, பருத்தியடைப்பு, ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள இரண்டு பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக தங்களோடு ஒத்துழைக்கும் வண்ணமும் மேற்படி காணியின் உரிமையாளருக்கு யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள த்தினரால் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. தனது காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு தருமாறு காணி உரிமையாளர் அயல்;பகுதி…

Read More

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார் ஜனாதிபதி

திருடர்களுக்கு சுதந்திரக்கட்சியில் இடமில்லை என்றும் தூய்மையானவர்களுக்கு மட்டுமே “அழைப்பு” என்கிறார்  ஜனாதிபதி

மோசடியில் ஈடுபட்ட திருடர்களுக்கு சுதந்திரக் கட்சியில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த அணியினருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். மேலும் குற்றச் சாட்டுகள் அற்ற தூய்மையான அரசியல்வாதிகளுக்கே தாம் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். திருடர்களைப் பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு தூய்மையான அரசி யல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்துகொள்ள முடியாது இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார். சிலரால் எமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்துகொள்ள முடியாதென்பதை அறியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரை யும் எம்முடன் ஒரே அணியில் அணிதிரளு மாறு நான்…

Read More

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக  வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வட மாகாண சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முல்லைத்தீவில் சிங்களவர்களுக்கு மிகப்பெரிய நீர்ப் பாசனத்திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டு வரும் இரகசிய நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதனை வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது. மகாவலி எல் ஜடுஸ வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி கிவுல் ஓயா எனும் பெயரில் சிங்களவர்களுக்கு என மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதனை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த திட்டம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின்…

Read More

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய இராணுவம்

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய  இராணுவம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை யுத்த காலத் தில் இராணுவ சோதனைக்கு உட்படுத்தியது போன்று தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய பொலி ஸார் சோதனைக்கு உட்படுத்தி யது தொடர்பில் மக்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ள னர். எங்கள் பிள்ளைகள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி உயிர் துறந்தார்களோ அவர்களை கொண்டே எம்மவர்களால் தம்மை சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி மக்கள் உயிர் துறந்தார்களோ,…

Read More

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?

ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதிவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு தனது அறிக்கை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி திலக் மாரப்பனை குழுவை நியமித்தது.குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.குறித்த குழுவின் அறிக்கையானது கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிணைமுறி மோசடி…

Read More

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில்  அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தாம் ஆய்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்.தமிழர்களின் கலாசார தலைநகர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம், நீண்ட கிரிக்கெட் வரலாற்றைக்  கொண்டிருக்கின்ற போதிலும், 1970களில் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் வடக்கில் எந்தவொரு சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களும் அமைக்கப்படவில்லை.இந்த நிலையிலேயே தற்போது மண்டைதீவில் சர்வதேச தரம்வாய்ந்த மைதானத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு முன்னர் ஆனையிறவை அண்டியுள்ள பகுதிகளில் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்திகள்…

Read More

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது

30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வைத்தியசாலையை ,இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை…

Read More
1 284 285 286 287 288 425