கெஜ்ரிவாலை வைத்து கட்சி தொடங்குவதா? கமல்ஹாசனுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கெஜ்ரிவாலை வைத்து கட்சி தொடங்குவதா? கமல்ஹாசனுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துகள். இடதுசாரிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்டனரா? கொச்சையான முறையில் திராவிடத்தை பரிமாறி இருப்பது நமக்கெல்லாம் அவமானம். தமிழர்கள் மற்றும் அவர்களின் தன்மானத்தை எல்லாம் இந்த நேரத்தில் அடுத்த மாநில முதல்வர்கள் சொல்லி தருகிறார்கள். கெஜ்ரிவாலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும் ஒன்றுமே தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம். கமல்ஹாசனை பற்றி ஒருவர் காகிதப்பூ மணக்காது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், தன்னை விதை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் கமல்ஹாசனை காகித விதை என்று சொல்லலாமா? என்னை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

Read More

காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத,…

Read More

நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்

நிரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்

ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நிரவ் மோடி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக முடியாது என இ.மெயில் வாயிலாக தெரிவித்துள்ளார். நிரவ் மோடியின் மோசடி பற்றி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு நடவடிக்கையாக, நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்கள், கடைகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, சொத்துகளை கைப்பற்றி வருகின்றனர்.’மியூச்சுவல் பண்டு’ மற்றும் நிறுவன பங்குகளில், நிரவ் மோடியும், சோக்சியும் முதலீடு செய்திருந்த, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. அத்துடன், நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான, ஒன்பது…

Read More

நாச்சியாா் – திரைவிமர்சனம் சினிமா விமர்சனம்

நாச்சியாா் – திரைவிமர்சனம் சினிமா விமர்சனம்

அபலை சிறுமியின் கர்ப்பமும், அதனால் அவளுக்கும், அவளது காதலனுக்கும் ஏற்படும் சிக்கலைத் தீர்க்கும் பெண் போலீஸும் தான் நாச்சியார் கரு. சமையல் பந்தி வேலைகளுக்கு செல்லும், சென்னை குப்பத்து பையன் காத்து எனும் ஜி.வி.பிரகாஷுக்கும், அதே மாதிரி ஒரு குப்பத்தில் பிறந்து பெரிய பங்களா வீடுகளில் வீட்டு வேலை செய்யும் அரசி – இவானாவுக்கும் காதல். இந்த காதல் கசிந்து உருகியதில், கர்ப்பமாகிறார் இவானா. மைனர் காதல், கர்ப்பத்தால், போலீஸு, கேஸு என இவர்களது காதல் மேட்டர் பரபரப்பாக பற்றிக் கொண்டதின் விளைவு, ஜி.வி.பிரகாஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போக, இவானாவிற்கு அவரது குழந்தை பேறுகாலம் வரை அடைக்கலம் தருகிறார் இந்த கேஸை விசாரிக்கும் போலீஸ்…

Read More

தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் பெயர் ”மக்கள் நீதி மய்யம் ” என்று கட்சியின் பெயரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: கமல் நேர்மையானவர் மட்டும் அல்ல, துணிச்சாலனவரும் ஆவார். பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டும் என்றால் கமலஹாசனை ஆதரியுங்கள். தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது. அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுக்கு இடையே தமிழகம் சிக்கி தவிக்கிறது. ஊழல் வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை ஆதரியுங்கள். நேர்மையான அரசு இருந்தால் அனைத்தும் சாத்தியம்….

Read More

பழனிசாமி – ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மோடி வருகை குறித்து ஆலோசனை

பழனிசாமி – ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மோடி வருகை குறித்து ஆலோசனை

தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழகத்தில், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.,விற்கும், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, பா.ஜ.,விற்கும் இடையே, ஜெ., மறைவுக்கு பின், நெருக்கம் அதிகமானது. பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை ஆட்டுவிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த சூழ்நிலையில், சமீப காலமாக, இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி உருவானது. தமிழக பா.ஜ., தலைவர்கள், தமிழக அரசை விமர்சிப்பதும், அவர்களுக்கு, அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும் அதிகரித்தது. இவற்றுக்கு சிகரம் வைப்பது போல், ‘தமிழகத்தில், பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடக்கின்றன’ என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். இது,…

Read More

அரசியல் பயணத்தை கலாம் நினைவிடத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கக் கூடாது-பொன்.ராதாகிருஷ்ணன்

அரசியல் பயணத்தை கலாம் நினைவிடத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கக் கூடாது-பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் கமல்ஹாசன் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். அரசியல் அடி எடுத்து வைக்கும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ராமேசுவரத்தில் இருந்து அவர் தன் பயணத்தை தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்க வேண்டாம். அப்துல் கலாம் நினைவிடம் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய அடையாளமாக விளங்கும் இடம். நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நாம் சிலரையாவது விட்டு வைக்க வேண்டும். அதில் முதலில் இருப்பவர் அப்துல் கலாம். கமல்ஹாசன் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். நான் மத்திய மந்திரியாக இருப்பதால் என்னை சந்திக்க வேண்டாம் என்று…

Read More

சிரியாவில் தாக்குதல்: 98 பேர் பலி

சிரியாவில் தாக்குதல்: 98 பேர் பலி

மேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், 20 குழந்தைகள் உட்பட, 98 பேர் உயிரிழந்தனர். கடந்த, 2011 முதல், அதிபர், பஷர் – அல் – ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சிரியாவின் பல பகுதிகளை, புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களுடைய பிடியில் உள்ள பகுதிகளை, ராணுவ உதவியுடன் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது. சமீபத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவத்தினரின் விமான தாக்குதலில், 20 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட, 98 பேர் பலியானதாக, பிரிட்டனை சேர்ந்த மனித…

Read More

வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது

வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது

வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகன் கைது செய்யப்ப ட்டார். பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

Read More

உள்ராட்சித் தேர்தல்களில் வெற்றியீட்டிய தமது அணியினரை உடனடியாக சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

உள்ராட்சித் தேர்தல்களில் வெற்றியீட்டிய தமது அணியினரை உடனடியாக சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா தெரிவித்தார். ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத எந்தவொரு வேட்பாளர்களையும் தவிர்க்காது சகலரையும் ஒன்றிணைத்து கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான…

Read More
1 282 283 284 285 286 425