இனி எங்கள் வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை நடிகை ஸ்ரீதேவி கணவர் உருக்கம்

இனி எங்கள் வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை நடிகை ஸ்ரீதேவி கணவர் உருக்கம்

மும்பையில் மக்கள் வெள்ளத்தில் நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்திய திரையுலகின் ‘கனவு கன்னி’ என வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தார். அங்கு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் கடந்த 24–ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக இறந்தார் என கூறப்பட்ட நிலையில், துபாய் போலீசார் வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஸ்ரீதேவி குளியல் அறையில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் மூழ்கியதில் மூச்சுத்திணறி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அவர் மரணம் அடைந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது….

Read More

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12-ந்தேதி பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி வரை ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்ய கால அவகாசத்தை பொதுப்பணித்துறை நீட்டித்திருந்தது. இந்தபணியில் ஈடுபடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி நிறுவனம், பி.எஸ்.கே நிறுவனம், வெங்கடாஜலபதி நிறுவனம், மாணிக்கம் நிறுவனம், ராஜதுரை நிறுவனம் ஆகிய 5 கட்டுமான நிறுவனங்கள்…

Read More

காவிரி வாரியம் பற்றி பிரதமருடன் சந்திப்பு எப்போது? காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி வாரியம் பற்றி பிரதமருடன் சந்திப்பு எப்போது? காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி வாரியம் அமைப்பது பற்றி முடிவு எட்டி 9 நாட்களாகியும் பிரதமரைச் சந்திப்பதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்து இன்றுடன் 9 நாட்களாகி விட்டன. ஆனால், பிரதமரை சந்திப்பதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி…

Read More

ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர்

ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர்

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி துபாய் ஹோட்டலி இறந்தார். அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப இந்தியர் ஒருவர் உதவியுள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் ஷெர்ரி தாமரச்சேரி என்று தெரியவந்துள்ளது. 44 வயதாகும் தாமரச்சேரி, துபாயில் இறந்த 4,700 பேரின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். இதுபோன்று 38 நாடுகளுக்கு அவர் உடல்களை அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்ல தெரியாமல் விழிக்கும் மக்களுக்கு உதவுவது குறித்து தாமரச்சேரி கூறியதாவது: இங்கு யார் இறந்தாலும், ஏழை, பணக்காரர். ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஐக்கிய அரபு அமீரகத்தில்…

Read More

தமிழக அரசியலில் ‘‘புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ டி.ராஜேந்தர் அறிக்கை

தமிழக அரசியலில் ‘‘புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ டி.ராஜேந்தர் அறிக்கை

‘‘தமிழக அரசியலில் புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ என்று டி.ராஜேந்தர் கூறினார். லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழக அரசியலில் இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். இல்லை. ஜெயலலிதாவும் இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக சற்று பாதிக்கப்பட்டு இருக்கிறார். கருணாநிதியிடம் ஆசிபெற்று சிலர் புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம். கருணாநிதி இக்கட்டாக இருந்த கால கட்டத்தில், 1984–ம் ஆண்டு எனது 28–வது வயதில் அவர் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, அவரது தொண்டனாக எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். வைகோ தி.மு.க.வை உடைத்தபோது, கருணாநிதி என்னை அழைத்தபோது, கழகத்தின் நலனுக்காக ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நான் அரும்பாடுபட்டு நடத்திய…

Read More

மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் – தினகரன் பரபரப்பு தகவல்

மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் – தினகரன் பரபரப்பு தகவல்

மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் என்று டிடிவிதினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது: மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் * விசாரணை ஆணையம் மூலமே ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை வெளிவரும். * விசாரிக்கப்பட வேண்டியவர்களை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் விசாரிக்கவில்லை. * வெளியிடப்பட்ட சிகிச்சை வீடியோ, ஜெயலலிதா கேட்டு சசிகலா எடுத்தது. * நாளை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடுகளை பெற்று தந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது. 22 மணி…

Read More

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில்…

Read More

விலேபார்லேவில் உள்ள மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம்

விலேபார்லேவில் உள்ள மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம்

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்திய திரையுலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார். ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை. அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை…

Read More

டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வேட்டியை உருவுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் அணியினர் நாளுக்கு நாள் வேகம் பெற்று வருவது அதிமுக அமைச்சர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. திமுக, அதிமுக மோதல் என்பதை விட டிடிவி அணியினர், அதிமுக அமைச்சர்கள் சொல்லாடல் பேசுபொருளாகி வருகிறது. தனிப்பட்ட முறையில் பேய், பிசாசு, பைத்தியம், கீழ்ப்பாக்கம் கேசு என்று திட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன் டிடிவி ஆட்கள் குறித்து பேசும்போது ஆவேசமானார். அதிமுக கட்சிக்கொடி, கரைவேட்டி கட்ட நீங்கள் யாருடா என ஒருமையில் பேசிய…

Read More
1 280 281 282 283 284 425